Tuesday, April 30, 2019

காவல்துறை இலக்கு தவறியதால் இடம்பெற்றுள்ள விபரீதம் காணொலி உள்ளே


யக்கல – பெலும்மஹர சந்தியில் சந்கேத்திற்கிடமான நபரொருவரை இலக்கு வைத்து காவல்துறை மேற்கொண்ட துப்பாக்கி பிரேயோகம் குறி தவறியதில் வேறு ஒரு நபர் காயமடைந்துள்ளார்.


இன்று அதிகாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.



பையொன்றுடன் பெலும்மஹர சந்தியில் சந்தேகித்திற்கிடமான நபரொருவர் நடமாடுவதாக இன்று அதிகாலை காவல்துறைக்கு கிடைத்த தகவல் ஒன்றுக்கு அமைய யக்கல காவல்துறை குழுவொன்று சம்பவ இடத்திற்கு சென்றுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.



பின்னர் சந்தேகத்திற்கிடமான நபரை சோதனைக்கு உற்படுத்த காவல்துறையினர் முற்பட்ட வேளை அவர் தன்னிடமிருந்து பையினை கைவிட்டு தப்பியோடியுள்ளார்.



பின்னர் சந்தேக நபர் மீது காவல்துறையினர் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ள நிலையில், குறிதவறி பேருந்து தரிப்பிடத்தில் நின்றிருந்த வேறு ஒரு நபர் மீது துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளது.



இதில் காயமடைந்த கம்பஹா – நெதுன்கமுவ பகுதியை சேர்ந்த 43 வயதான நபர் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.



இந்நிலையில், குறித்த சந்தேக நபரின் பையிலிருந்து சந்தேகத்திற்கிடமான எவ்வித பொருட்களும் இனங்காணப்படாத நிலையில், அதனுள் இரண்டு வாத்து குஞ்சுகளும், ஒரு கோழி குஞ்சும் இருந்துள்ளன.



தப்பிச் சென்ற நபர் இவற்றை திருடியிருக்கலாம் என காவல்துறை சந்தேகம் வெளியிட்டுள்ளது.



எனினும் சந்தேக நபரை தேடி விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

Author: verified_user

0 comments: