யாழ். மாவட்டத்தின் அபிவிருத்தி தொடர்பாக கலந்துரையாடுவதற்கு யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்த பிரதமர், முப்படையினர் மற்றும் மக்கள் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடலை மேற்கொண்டிருந்தார்.
இந்த கலந்துரையாடலின் போதே அவரிடம் குறித்த யோசனை முன்வைக்கப்பட்டது.
பலாலி விமான நிலையத்தை பிராந்திய நிலையமாக்குவதற்கு இதுவரை காலமும் சுமார் ஆயிரம் ஏக்கர் காணி தேவை என கூறிவந்துள்ள நிலையில் பிரதமருடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் 750 ஏக்கரே போதுமானது என விமானப் படையினர் தெரிவித்துள்னர்.
அவ்வாறு 750 ஏக்கர் காணி போதுமானதாக இருந்தால் விரைவாக பலாலி விமான நிலையத்தை பிராந்திய விமான நிலையமாக்குவதற்கான நடவடிக்கைகள் விரைவாக முன்னெடுக்கப்படும் என்று பிரதமர் கூறினார்.

0 comments: