உதவி சுங்க அதிகாரிகளாக தெரிவு செய்யப்பட்ட 68 பேருக்கு நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர, நியமனக் கடிதங்ளை நேற்று வழங்கினார். நிதியமைச்சில் இந் நிகழ்வு நடைபெற்றது.
திறந்த போட்டிப் பரீட்சையினூடாக தோற்றிய 10,000 பேரில் அதிகூடிய புள்ளி அடிப்படையில் 227 பேர் சித்தியடைந்திருந்தனர். அவர்களுள் நேர்முகத் தேர்வு மூலம் உதவி சுங்க அதிகாரிகளாக தெரிவுசெய்யப்பட்ட 68 பேருக்கு நேற்று முன்தினம் (24) நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டன.
இந் நிகழ்வில் சுங்கத்திணைக்கள பணிப்பாளர் நாயகம் பி.எம்.எஸ்.சார்ள்ஸும் கலந்துகொண்டார்.
தெஹிவளை, கல்கிஸ்ச விசேட நிருபர் - Source Thinakaran

0 comments: