Nation Lanka News : SPORTS NEWS

Showing posts with label SPORTS NEWS. Show all posts
Showing posts with label SPORTS NEWS. Show all posts

Saturday, August 31, 2019

நியூஸிலாந்துடனான 20 :20 தொடர் இன்று ஆரம்பம்

நியூஸிலாந்துடனான 20 :20 தொடர் இன்று ஆரம்பம்

இலங்கை மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட சர்வதேச இருபதுக்கு - 20 கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி இன்று ஆரம்பமாகவுள்ளது.

அதன்படி இப் போட்டியானது இன்றிரவு 7.00 மணிக்கு கண்டி பல்லேகல மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.
இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள நியூஸிலாந்து கிரிக்கெட் அணியானது இலங்கை அணியுடன் டெஸ்ட் மற்றும் இருபதுக்கு - 20 போட்டிகளில் விளையாடி வருகிறது.

இதில் நடைபெற்று முடிந்த டெஸ்ட் தொடரானது 1:1 என்ற கணக்கில் சமநிலையில் முடிந்த இருபதுக்கு - 20 தொடரின் முதல் போட்டி இன்றைய தினம் ஆரம்பமாகிறது. 
இத் தொடரானது இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு மிக முக்கியமான தொடராக அமையவிருக்கின்றது. இரு தரப்பு தொடர் என்பதை தவிர்த்து, அடுத்த வருடம் அவுஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள இருபதுக்கு - 20 உலகக் கிண்ணத்துக்கான அடித்தளமாக இந்த தொடர் அமையவிருக்கின்றது.
இருபதுக்கு - 20  உலகக் கிண்ணத்தை கருத்திற்கொண்டுள்ள இரண்டு அணிகளும் புதிய சில வீரர்களை அணிக்குள் அழைத்து மாற்றங்களுடன் களமிறங்கவுள்ளன. 
இலங்கை அணியை பொருத்தவரை, அனுபவ வீரராகவும், தலைவராகவும் லசித் மாலிங்க பொறுப்பை ஏற்றுள்ளதுடன், ஏனைய வீரர்களில் பெரும்பாலும் இளம் வீரர்களே இணைக்கப்பட்டிருக்கின்றனர். 
இதில், உள்ளூர் இருபதுக்கு - 20 போட்டிகளில் திறமைகளை வெளிப்படுத்தி வரும் வனிந்து ஹசரங்க, ஷெஹான் ஜயசூரிய மற்றும் லஹிரு மதுஷங்க ஆகியோர் அணிக்குள் அழைக்கப்பட்டுள்ளனர். இதனால், மெத்தியுஸ் மற்றும் திசர பெரேரா ஆகியோர் அணியிலிருந்து நீக்கப்பட்டிருக்கின்றனர்.
அடுத்த வருடம் அவுஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள இருபதுக்கு - 20  உலகக் கிண்ணத்துக்கு முன்னர் இலங்கை அணிக்கு 20 இற்கும் குறைவான இருபதுக்கு - 20  போட்டிகள் மாத்திரமே உள்ள நிலையில், இளம் வீரர்களை வைத்து, அனுபவ வீரர் லசித் மாலிங்க சிறந்த இருபதுக்கு - 20  அணியொன்றை உருவாக்கும் முயற்சியிலும், இந்த தொடரை வெற்றிபெற வேண்டும் என்ற முயற்சியிலும் இறங்கியுள்ளார்.
நியூசிலாந்து அணியும் தங்களுக்குள் புதிய மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. அணித் தலைவர் கேன் வில்லியம்சன் மற்றும் அனுபவ வேகப் பந்துவீச்சாளர் ட்ரென்ட் போல்ட் ஆகியோருக்கு ஓய்வு வழங்கப்பட்டு, டிம் செய்பர்ட், டார்லி மிச்சல், ஸ்கொட் குகலெய்ன் மற்றும் டொம் ப்ரூஸ் ஆகிய புதிய வீரர்கள் அணிக்குள் அழைக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு புதிய வீரர்களுடன் களமிறங்கும் நியூசிலாந்து அணியானது, இந்த தொடரின் மூலமாக தங்களுடைய எதிர்கால இருபதுக்கு - 20  வீரர்களை அடையாளம் காண்பதற்கு தயாராகியுள்ளது. பயிற்சிப் போட்டியில் மிகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்த அணி முதல் போட்டியை வெற்றியுடன் ஆரம்பிக்க காத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Friday, July 26, 2019

"பல வலிகளை அனுபவித்த மலிங்கா"

"பல வலிகளை அனுபவித்த மலிங்கா"

லசித் மலிங்கா இன்று -26- தனது கடைசி ஒருநாள் போட்டியில் விளையாடவுள்ள நிலையில் அவருக்கு சக இலங்கை வீரர் கவுசல் சில்வா வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்கா இன்று வங்கதேசத்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியுடன் ஓய்வு பெறுகிறார்.

பந்துவீச்சில் பல்வேறு சாதனைகளை படைத்துள்ள மலிங்கா குறித்து இலங்கை வீரர் கவுசல் சில்வா தனது டுவிட்டரில், நீங்கள் நாட்டுக்காக குறிப்பிடத்தக்க விடயங்கள் பலவற்றை செய்துள்ளீர்கள்.

நீங்கள் உங்கள் வாழ்க்கையில் பல வலிகளை அனுபவித்துள்ளீர்கள், பந்துவீச்சின் மூலம் நீங்கள் பல சாதனைகள் செய்துள்ளீர்கள்.

அடுத்த தலைமுறைக்கு நீங்கள் ஊக்கமளிக்கும் வழிகாட்டி என புகழாரம் சூட்டியுள்ளார்.

Friday, June 7, 2019

போட்டி கைவிடப்பட்டாலும் Sri Lanka Cricket அணிக்கு அதிர்ஷ்டம்

போட்டி கைவிடப்பட்டாலும் Sri Lanka Cricket அணிக்கு அதிர்ஷ்டம்

பிரிஸ்டோல் – கௌண்டி மைதானத்தில் நடைபெறவிருந்த இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான உலகக் கிண்ணத் தொடரின் 11வது லீக் போட்டி மைதானத்தில் உள்ள ஈரத்தன்மை காரணமாக கைவிடப்பட்டது.


அதேநேரம்,  போட்டி கைவிடப்பட்டுள்ளதுடன் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு தலா ஒவ்வொரு புள்ளிகள் பகிரப்பட்டுள்ளன. இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி இன்றைய தினம் (07) பிரிஸ்டோலில் நடைபெறவிருந்தது. சீரற்ற காலநிலை காரணமாக பாதிக்கப்பட்டதால் போட்டி நீண்ட நேரமாக இடைநிறுத்தப்பட்டிருந்தது.
எனினும் பின்னர் மழைக்காலநிலை வழமைக்கு திரும்பியதில், ஓவர்கள் குறைக்கப்பட்ட போட்டியாக இந்தப் போட்டி இடம்பெறும் என எதிர்பார்க்கப்பட்டது.  இதற்காக மைதானம் தயார்படுத்தப்பட்ட போதும், நடுவர்கள் மைதானத்தின் ஈரத்தன்மையை கருத்திற்கொண்டு போட்டியை கைவிடுவதாக அறிவித்தனர்.

ஓவர்கள் குறைக்கப்பட்ட போட்டியாக நடத்தும் முகமாக நடுவர்கள் மைதானத்தின் தன்மையை ஆராய்ந்திருந்தனர். இதன்போது, மைதானத்தின் சில பகுதிகளில் ஈரத்தன்மை அதிகமாக இருந்தது. அதனால் வீரர்களுக்கான பாதுகாப்பு மற்றும் சர்வதேச ஒருநாள் போட்டியின் ஆடுகளத்தின் தன்மை என்பவற்றை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. நடுவர்கள் மைதானத்தை ஆராய்ந்ததுடன், போட்டி மத்தியஸ்தர் எண்டி பைக்ரொப்ட்டுடன் கலந்துரையாடலை மேற்கொண்ட பின்னரே போட்டி கைவிடப்படுவதாக அறிவித்துள்ளனர்.

ஆட்டத்தின் போக்கை மாற்றியமைத்த நடுவர்களின் நான்கு தவறான முடிவுகள்

ஆட்டத்தின் போக்கை மாற்றியமைத்த நடுவர்களின் நான்கு தவறான முடிவுகள்

அவுஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டியில் நடுவர்கள் இழைத்த தவறுகள் குறித்து மேற்கிந்திய அணியின் சகலதுறை வீரர் கார்லோஸ் பிரத்வெய்ட் கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளார்.
நேற்றைய போட்டியில் நடுவர்களாக பணியாற்றிய கிறிஸ் கவானேயும் ருச்சிரபல்லியகுருவும் நான்கு தடவைகள் தவறிழைத்தனர்.
இந்த தவறுகள் மேற்கிந்திய அணியின்  தோல்விக்கு வழிவகுத்தன.
மேற்கிந்திய அணி துடுப்பெடுத்தாடிய வேளை நான்காவது ஓவரின் ஐந்தாவது பந்தில் மிச்செல் ஸ்டார்க் எல்பிடபில்யூ முறையில் கிறிஸ்கெயிலை ஆட்டமிழக்கச்செய்தார்.
பின்னர் தொலைக்காட்சி ரீபிளேக்கள் மூலம் அந்த பந்திற்கு முதல் பந்து நோபோல் என்பதும் நடுவர் கவானே அதனை கவனிக்க தவறிவிட்டார் என்பதும் தெரியவந்தது.
பிரீஹிட்டாக அறிவிக்கப்பட்டிருக்கவேண்டிய பந்தில் கெய்ல் நடுவரின் தவறினால் ஆட்டமிழந்தமை கடும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கிறிஸ்கெயில் ஆட்டமிழப்பதற்கு முன்னரும் நடுவர்கள் அவரிற்கு எதிராக  இரண்டு  தவறான தீர்ப்புகளை வழங்கியமையும் கெயில் அவற்றை மறுஆய்விற்கு  உட்படுத்தியதும் குறிப்பிடத்தக்கது.
முதலில் கெயில் விக்கெட் காப்பாளரிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார் என நடுவர் கவானே அறிவித்தார்.  அதனை கெயில் மறு ஆய்விற்கு உட்படுத்தினார்.
அதன் பின்னர் நடுவர் வழங்கிய எல்பிடபில்யூ தீர்ப்பும் பிழையானது என்பது மறு ஆய்வின் மூலம் தெரியவந்தது.
பின்னர் இலங்கை நடுவர் ருச்சிர பல்லியகுரு மேற்கிந்திய அணியின் தலைவர் ஜேசன்ஹோல்டர் எல்பிடபில்யூ முறையில் ஆட்டமிழந்தார் என இரு தடவைகள் அறிவித்தார்.
ஆனால் மறுஆய்வின் போது அவை தவறான முடிவுகள் என்பது தெரியவந்தது.
நடுவர்களின் இந்த தவறுகள் குறித்து கருத்து வெளியிட்டுள்ள கார்லோஸ் பிரத்வெய்ட் நடுவரின் முடிவுகள் அணியினர் மத்தியில் கடும் விரக்தியையும் குழப்பநிலையையும் ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
கடந்த சில வருடங்களாக மேற்கிந்திய அணியினருக்கு எதிராக பிழையான தீர்ப்புகளை நடுவர்கள் வழங்குவது அதிகரித்துள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஒவ்வொருமுறை எங்கள் கால்களில் பந்து படும்போதும் நடுவர்களின் விரல்கள் உயர்கின்றன எதிரணியின் கால்களில் பந்துபடும்போது விரல்கள் உயர்வதில்லை என கார்லோஸ் பிரத்வெய்ட் தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக நாங்கள் அடிக்கடி முடிவுகளை மறு ஆய்விற்கு உட்படுத்தவேண்டிய நிலைக்கு தள்ளப்படுகின்றோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதனை தெரிவிப்பதற்காக எனக்கு அபராதம் விதிப்பார்களா என்பது தெரியவில்லை ஆனால் நடுவர்களின் தீர்ப்புகள் கடும் ஏமாற்றத்தை அளித்துள்ளன எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாங்கள் பந்து வீசும்போது சில பந்துகளை அவர்கள் பிழையாக வைட் என அறிவித்தனர் என நாங்கள் கருதுகின்றோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
289 ஓட்டங்களை பெறவேண்டிய நிலையில் நாங்கள் துடுப்பெடுத்தாடும் போது தனிநபராக 180 ஓட்டங்களை பெறக்கூடிய கிறிஸ்கெயிலை இழப்பது என்பது நாங்கள் எதிர்பார்த்த ஆரம்பத்தை குழப்பியுள்ளது எனவும் கார்லோஸ் பிரத்வெய்ட் தெரிவித்துள்ளார்.

Monday, June 3, 2019

VIDEO : திசர பெரேராவை முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்க வேண்டுமென வலியுறுத்தி, மரத்தில் ஏறியபடி போராட்டம்.

VIDEO : திசர பெரேராவை முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்க வேண்டுமென வலியுறுத்தி, மரத்தில் ஏறியபடி போராட்டம்.


இலங்கை அணிக்காக மீகொடப் பகுதியை சேர்ந்த ஒருவர் வித்தியாசமான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார்.


தற்போது இடம்பெற்று வரும் உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் இலங்கை அணி சார்பில் திசர பெரேராவை முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்க வேண்டுமென வலியுறுத்தி மீகொட பகுதியைச் சேர்ந்த  நபர் ஒருவர் மரத்தில் ஏறியபடி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார்.

இந்நிலையில் குறித்த நபர் இன்று காலை 8.45 மணியளவில் மரத்தில் ஏறிய அவர் தனது போராட்டத்திற்கு முடிவு தெரியும் வரை தான் மரத்திலிருந்து இறங்கப்போவதில்லை எனத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில்,

“நான் மீகொட பகுதியிலிருந்து வருகிறேன் இன்று காலை 8.45, 9 மணியளலில் இந்த மரத்தில் ஏறினேன்

தற்போது இடம்பெற்று வரும் உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் எமது இலங்கை அணி சார்பில் திசர பேரேரா முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்க வேண்டும்

எமது அணி தொடர்ந்து தோல்வியுற்று வருவதை எம்மால் பார்த்துக் கொண்டு இருக்க முடியாது. இங்குள்ளவர்களுக்கு இலகுவான முறையில் எல்லா வேலைகளையும் செய்து கொள்கின்றார்கள்.

நாங்களும் இந்த நாட்டில் வரி செலுத்துகின்றோம் எனவே இவற்றை கேட்பதற்கு எமக்கு உரிமை உள்ளது.

எனவே விளையாட்டுத் துறை அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ மற்றும் இங்கிலாந்தின் இலங்கை அணி முகாமையாளருடன் கதைத்து தனக்கு முடிவு ஒன்றைக் கூற வேண்டும். அவர்களிடமிருந்து முடிவு வரும் வரை நான் போராட்டத்தை  கைவிட மாட்டேன் எனத் தெரிவித்தார்.


இதன் போது ஊடகவியலாளர் ஒருவர், அவர்களிடமிருந்து பதில் வராவிட்டால் என செய்வீர்கள் எனக் கேட்ட போது,

அதற்கு பின் எதுவும் செய்ய முடியாது. எமது இலங்கை அணிக்காக நான் எதையும் செய்வேன் என தெரிவித்துள்ளார்.


Saturday, June 1, 2019

திமுத்தை கைவிட்ட ஏனைய வீரர்கள்!!!!!

திமுத்தை கைவிட்ட ஏனைய வீரர்கள்!!!!!

நியூஸிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் திமுத் கருணாரத்னவுடன் ஏனைய வீர்கள் கைகோர்த்து நிலைத்து நின்றாடாமையினால் இலங்கை அணி 136 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்துள்ளது.
ஐ.சி.சி. 12 ஆவது உலகக் கிண்ணத் தொடரின் நான்காவது போட்டி இன்று மாலை 3.00 மணிக்கு நியூஸிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கிடையே கார்டிப்பில் ஆரம்பமானது.
இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற நியூஸிலாந்து அணித் தலைவர் கேன் வில்லியம்சன் துடுப்பெடுத்தாடும் வாய்ப்பினை இலங்கை அணிக்கு வழங்க இலங்கை அணியும் முதலில் துடுப்பெடுத்தாட ஆடுகளம் புகுந்தது.
ஆரம்ப வீரர்களாக லஹிரு திரிமான்ன மற்றும் திமுத் கருணாரத்ன களமிறங்கி துடுப்பெடுத்தாட ஆரம்பிக்க மாட் ஹென்றியின் முதல் பந்தினை எதிர்கொண்ட திரிமான்ன ஒரு நான்கு ஓட்டத்தை விளாசினார். எனினும் இரண்டாவது பந்தில் எல்.பி.டபிள்.யூ. முறையில் நான்கு ஓட்டத்துடனேயே அவர் ஆட்டமிழந்து வெளியேறினார்.
‍2 ஆவது கிக்கெட்டுக்காக அணித் தலைவர் திமுத்துடன் இணைந்து குசல் பெரேரா ஜோடி சேர்ந்தாட இலங்கை அணி முதல் ஐந்து ஓவர்களில் 25 ஓட்டத்தை பெற்றது. இதன் பின்னர் குசல் பெரேரா அதிரடி காட்ட ஆரம்பித்தவேளை அவரும் 8.1 ஆவது ஓவரில் 29 ஓட்டத்துடன் ஆட்டமிழந்தார்.
குசலின் வெளியேற்றத்தையடுத்து களமிறங்கிய குசல் மெண்டீஸும் எதிர்கொண்ட முதல் பந்திலேயே கோல்டன் டக்கவுட் முறையில் ஆட்டமிழந்தார். இதனால் இலங்கை அணி 46 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களை இழந்தது.
அந்த ஓவருக்குப் பந்துப் பரிமாற்றம் மேற்கொண்ட மாட் ஹென்றி அடுத்தடுத்து இரண்டு விக்கெட்டுக்களை சாய்த்த வேகத்தில் ஹேட்ரிக்குக்காக காத்துக் கொண்டிருந்தார். எனினும் அடுத்து களமிறங்கிய தனஞ்சிய டிசில்வா ஹென்றியின் 3 ஆவது பந்தில் ஒரு நான்கு ஓட்டத்தை விளாசி ஹெட்ரிக் வாய்ப்பை தகார்த்தார்.
அத்துடன் இலங்கை அணியும் 8.3 ஆவது ஓவரில் 50 ஓட்டங்களை கடந்தது. இருப்பினும் 11.5 ஆவது ஓவரில் தனஞ்சய டிசில்வா 4 ஒட்டத்துடன் ஆட்டமிழக்க, அடுத்தடுத்து வந்த மெத்தியூஸ் டக்கவுட் முறையிலும், ஜீவன் மெண்டீஸ் ஒரு ஓட்டத்துடனும் ஆட்டமிழந்து வெளியேறினர் (60-6).
7 ஆவது விக்கெட்டுக்காக திமுத் மற்றும் குசல் பெரேரா ஜோடி சேர்ந்தாட ஆரம்பிக்க இலங்கை அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுக்களை இழந்து, 92 ஓட்டத்தையும், 22 ஆவது ஓவரில் 100 ஓட்டங்களையும் பெற்றது. (திசர பெரேரா 19, திமுத் 38).
திசர பெரேரா அடித்து ஆட ஆரம்பித்தபோது 23.4 ஆவது ஓவரில் மிட்செல் சாண்ட்னருடைய பந்து வீச்சில் 27 ஓட்டத்துடன் ஆட்டமிழக்க, அடுத்தடுத்து வந்த இசுறு உதான டக்கவுட் முறையிலும், சுரங்க லக்மால் 7 ஓட்டத்துடனும் ஆட்டமிழந்தார்.
இதனால் இலங்கை அணி 130 ஓட்டங்களுக்கு 9 விக்கெட்டுக்களை பறிகொடுக்க, இறுதி விக்கெட்டுக்காக லசித் மலிங்க ஆடுகளம் நுழைந்தாட ஆரம்ப வீரராக களமிறங்கி அணித் தலைவர் திமுத் 28.4 ஆவது ஓவரில் அரைசதத்தை பூர்த்தி செய்தார்.
இந் நிலையில் 29.2 ஆவது ஓவரில் மலிங்க ஒரு ஓட்டத்துடன் ஆட்டமிழந்தார், இதனால் இலங்கை அணி அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்த நிலையில் 136 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது. திமுத் கருணாரத்ன 52 ஓட்டத்துடன் ஆட்டமிழக்காதிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
நியூஸிலாந்து அணிசார்பில் பந்து வீச்சில் மாட் ஹென்றி, லொக்கி பெர்குசன் ஆகியோர் தலா 3 விக்கெட்டுக்களையும், மிட்சல் சாண்டனர், கிரேண்ட்ஹோம் மற்றும் ஜேம்ஸ் நீஷம் தலா ஒரு விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.

Friday, May 24, 2019

பாகிஸ்தானை பந்தாடியது ஆப்கானிஸ்தான் - 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

பாகிஸ்தானை பந்தாடியது ஆப்கானிஸ்தான் - 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

உலகக்கோப்பைக்கான பயிற்சி ஆட்டத்தில் பாகிஸ்தானை 3 விக்கெட் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அணி வெற்றி பெற்றது.


உலகக்கோப்பைக்கான பயிற்சி ஆட்டங்கள் இன்று தொடங்கியது. ஒரு ஆட்டத்தில் பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதி வருகின்றன. பிரிஸ்டோலில் நடைபெற்று வரும் இந்த ஆட்டத்தில் பாகிஸ்தான் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது.

 அதன்படி இமாம்-உல்-ஹக், பகர் ஜமான் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இமாம்-உல்-ஹக் 32 ரன்னும், பகர் ஜமான் 19 ரன்களும் சேர்த்து ஆட்டமிழந்தனர். அடுத்து களம் இறங்கிய பாபர் ஆசம் 108 பந்தில் 112 ரன்கள் குவித்தார். அனுபவ வீரர் சோயிப் மாலிக் 59 பந்தில் 44 ரன்கள் சேர்த்தார்.



மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க பாகிஸ்தான் 47.5 ஓவரில் 262 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தது. ஆப்கானிஸ்தான் அணி சார்பில் முகமது நபி மூன்று விக்கெட்டும், ரஷித் கான், தவ்லாத் ஜத்ரான் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுக்களும் வீழ்த்தினர்.


263 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆப்கானிஸ்தான் அணி களமிறங்கியது.  தொடக்க ஆட்டக்காரர் ஷாசத் 23 ரன்கள் இருந்த போது காயம் காரணமாக வெளியேறினார்.

மற்ற வீரர்கள் பொறுப்புடன் ஆடினர். ஷாசய் 49, ரக்மட் ஷா 32, சகிடி  74, சமுல்லா 22, ஆப்கான் 7, நபி  34, சாட்ரன் 1, ரன்கள் அடித்திருந்தனர். நைப் 2 மற்றும் ரஷித் கான் 5 கடைசி வரை அவுட் ஆகாமல் களத்தில் இருந்தனர். இதனால் ஆப்கானிஸ்தான் அணி 49.4 ஓவரில் 3 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது.

பாகிஸ்தான் தரப்பில் ரியாஷ் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். வாசிம் 2 விக்கெட்டும் சடப் கான், முகமது ஹஸ்னைன் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்

Sunday, May 19, 2019

2019 உலகக் கிண்ண உத்தியோகபூர்வ பாடலை வெளியிட்ட ஐ.சி.சி.

2019 உலகக் கிண்ண உத்தியோகபூர்வ பாடலை வெளியிட்ட ஐ.சி.சி.

ஐ.சி.சி.யின் 12 ஆவது உலகக் கிண்ணத் தொடரானது எதிர்வரும் 30 ஆம் திகதி இங்கிலாந்தில் ஆரம்பமாகவுள்ள நிலையில், இவ் உலகக் கிண்ணத்துக்கான உத்தியோகபூர்வ பாடலை ஐ.சி.சி. வெளியிட்டுள்ளது.

உலகக் கிண்ணப் போட்டிகள் ஆரம்பமாவதற்கு இன்னும் 11 நாட்கள் எஞ்சியியுள்ள நிலையில்  சர்வதேச கிரிக்கெட் பேரவை உலகக் கிண்ணத்துக்கான உத்தியோகபூர்வ பாடல் ஒன்றை கடந்த 17 ஆம் திகதி வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ளது. 
”ஸ்டான்ட் பை” என்ற தலைப்பில் உருவாக்கப்பட்டிருக்கும் இந்தப் பாடலை இங்கிலாந்தைச் சேர்ந்த பொப் பாடகி லோரின் மற்றும் ருடிமென்டல் ஆகியோர் இணைந்து பாடி அசத்தியுள்ளனர்.


உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் தூதர் அன்ட்ரூ பிளிண்ட்டொப், லாரின் இணைந்து இந்தப் பாடலை உருவாக்கியுள்ளதுடன், உலகக் கிண்ணத் தொடர் நடைபெறும் காலம், கோடைக்காலம் என்பதால் காட்சியமைப்பும் அதற்கேற்றவாறு வடிவமைக்கப்பட்டுள்ளது.
மேலும், இங்கிலாந்தில் உள்ள பன்முக கலாசாரத்துக்கு முக்கியத்துவம் அளிப்பதாகவும் இந்த பாடல் உள்ளகியுள்ளதுடன், பாடல் வெளியான சிலமணி நேரங்களில், அது இணையதளங்களில் வைரலாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
இதேவேளை இந்தமுறை உலகக் கிண்ணத்தில் சம்பியனாகும் அணிக்கு வழங்கப்படுகின்ற பரிசுத் தொகையையும் ஐ.சி.சி. கடந்த 17 ஆம் திகதி வெள்ளிக்கிழமை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தகத்கது.

Saturday, May 18, 2019

இலங்கை , ஸ்கொட்லாந்து போட்டிக்கு பாதிப்பு

இலங்கை , ஸ்கொட்லாந்து போட்டிக்கு பாதிப்பு


இலங்கை மற்றும் ஸ்கொட்லாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கட் போட்டி மழையினால் பாதிக்கப்பட்டுள்ளது.

எடின்பேர்க் மைதானத்தில் இந்த போட்டி நடைபெறவுள்ளது.

மழை குறுக்கிட்டதன் காரணமாக தாமதித்துள்ள இந்த போட்டியை 20 ஓவர்களுக்கு மட்டுப்படுத்தி நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

எனினும் மழை மீண்டும் பெய்து வருவதால், போட்டி இன்னும் ஆரம்பிக்கப்படவில்லை.

Friday, May 17, 2019

2019 ஒரு நாள் உலக கிண்ண சாம்பியன்ஸ் வழங்கப்படும் பணப் பரிசு விபரம்

2019 ஒரு நாள் உலக கிண்ண சாம்பியன்ஸ் வழங்கப்படும் பணப் பரிசு விபரம்

2019 ம் ஆண்டு உலகக் கோப்பை இங்கிலாந்திலும் வேல்ஸ் நகரத்திலும் 30 ம் தேதி தொடங்கும்.

இந்த ஆண்டு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு பணம் உள்நாட்டு தேசிய கிரிக்கெட் கவுன்சில் மூலம் பகிரங்கப்படுத்தப்பட்டது.

அதன்படி, சர்வதேச கிரிக்கெட் கழகத்திற்கான மொத்த வருடாந்த ஒதுக்கீடு 10 மில்லியன் டாலர் ஆகும்.

2019 உலக சாம்பியன்ஷிப்பில், பரிசு பணம் $ 4 மில்லியனுக்கு மேல் இருக்கும்.

இது 70 மில்லியன் ரூபாவாக உள்ளது.

நிர்வாகிகள் குழு $ 2 மில்லியன் பரிசு பெறும்.

தேசிய கிரிக்கெட் கவுன்சில் மூன்றாவது மற்றும் நான்காவது இடங்களை வென்றவர்களுக்கு 16 லட்சம் டாலர் நன்கொடையாக வழங்க முடிவு செய்துள்ளது.

இரண்டு பிரிவுகளில் 45 முக்கிய சுற்றுகளை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

முதல் அரை இறுதி ஜூலை 9 ம் திகதி நடைபெறும், இரண்டாவது அரை இறுதி ஜூலை 11 ம் திகதி இடம்பெறவுள்ளது.

2019 உலக கோப்பை இறுதிப் போட்டி ஜூலை 14 ம் தேதி வரலாற்று லார்ட்ஸ் கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடைபெறும்.

Thursday, May 16, 2019

கத்தார்  பீபா 2022 உலகக் கிண்ணத்துக்கான 8 மைதானங்களில் 2 பூர்த்தி (படங்கள்)

கத்தார் பீபா 2022 உலகக் கிண்ணத்துக்கான 8 மைதானங்களில் 2 பூர்த்தி (படங்கள்)

2022ம் ஆண்டு கால்ப்பந்து உலகக் கிண்ணப் போட்டிகள் கத்தாரில் நடைபெறவுள்ளன. இதற்காக கத்தார் 8 பெரும் மைதானங்களை நிர்மாணித்து வருகின்றது. அவை வருமாறு!

  1. Al Bayt Stadium – Al Khor City ( Under the Construction) 
  2. Al Rayyan Stadium ( Under the Construction) 
  3. Al Thumama Stadium ( Under the Construction) 
  4. Al Wakrah Stadium (To be Opened today - 16.05.2019)
  5. Education City Stadium ( Under the Construction) 
  6. Khalifa International Stadium (Already Opened in 2017)
  7. Lusail Stadium ( Under the Construction) 
  8. Ras Abu Aboud Stadium ( Under the Construction) 

இந்த மைதானங்களில் புதிதாக புனர் நிர்மாணம் செய்யப்பட்டுள்ள அல் வக்ராஹ் மைதானம் இன்று உத்தியோக பூர்வமாக திறந்து வைக்கப்படவுள்ளது. சிறப்பு அதியாக கத்தாரின் அமீர் தமீம் அல்தானி அவர்கள் கலந்து கொள்ளவுள்ளதோடு FIFAவின் முக்கியஸ்தர்களும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர். 

கத்தார் கழகங்களுக்கிடைலான கால்ப்பந்துப் போட்டியான EMIR CUPயின் (47வது) நிகழ்வுகள் கடந்த ஏப்ரல் மாதம் கத்தாரில் ஆரம்பமாகின. அவ் எமிர் கிண்ணத்தின் இறுதிப் போட்டி கத்தார் அல் வக்ராஹ் மைதான அங்குரார்ப்பணத்தின் போது நடைபெறவுள்ளன. இதற்கான டிக்கட்டுக்கள் கத்தாரில் பரபரப்பாக விற்பனையாகி வருகின்றன. அல் வக்ராஹ் மைதானத்தில் 40 ஆயிரம் பார்வையாளர்கள் ஒரே நேரத்தில் அமர்ந்து போட்டிகளை கண்டு களிக்க முடியும் என்பதாக Supreme Committee for Delivery & Legacy அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Wednesday, May 15, 2019

உலக கிண்ணத்தை வெல்லும் வாய்ப்பு பாகிஸ்தான் அணிக்கே அதிகம் உள்ளது - கங்குலி

உலக கிண்ணத்தை வெல்லும் வாய்ப்பு பாகிஸ்தான் அணிக்கே அதிகம் உள்ளது - கங்குலி


2019 ஒருநாள் கிரிக்கட் உலக கிண்ணத்தை வெல்லும் வாய்ப்பு பாகிஸ்தான் அணிக்கே அதிகம் உள்ளதாக இந்தியா அணியின் முன்னாள் தலைவர் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.


பாகிஸ்தான் அணி தற்போது இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது.



அதற்கமைய, இறுதியாக இடம்பெற்ற 2 ஒருநாள் போட்டிகளிலும் பாகிஸ்தான் அணி இங்கிலாந்து அணிக்கு எதிராக 300க்கும் அதிகமான ஓட்டங்களை பெற்றது.



இது அந்த அணியின் சிறந்த துடுப்பாட்ட தன்மையை வெளிப்படுத்தியுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.



அத்துடன், கடந்த 2017ம் ஆண்டு இங்கிலாந்தில் இடம்பெற்ற வெற்றியாளர் கிண்ணத்தொடரிலும் இந்தியாவை வீழ்த்தி பாகிஸ்தான் அணி கிண்ணத்தை வென்றது.



அதற்கு முன்னர் கடந்த 2009ம் ஆண்டு இங்கிலாந்தில் இடம்பெற்ற 20க்கு 20 கிரிக்கட் உலக கிண்ணத்தையும் பாகிஸ்தான் அணியே வென்றது.



இங்கிலாந்தில் இடம்பெறும் போட்டிகளில் பாகிஸ்தான் அணி சிறந்த திறனை வெளிப்படுத்தி வருகிறது.



எனவே எதிர்வரும் ஒருநாள் சர்வதேச கிரிக்கட் உலகக் கிண்ண தொடரும் இங்கிலாந்தில் இடம்பெறவுள்ள நிலையில், அதிலும் பாகிஸ்தான் அணி ஆதிக்கம் செலுத்த கூடும் என கங்குலி குறிப்பிட்டுள்ளார்.

Monday, May 13, 2019

Sunday, May 12, 2019

மாலிங்கவின் இறுதிப்பந்தில் IPL கனவை இழந்த சென்னை

மாலிங்கவின் இறுதிப்பந்தில் IPL கனவை இழந்த சென்னை


ஐபிஎல் 2019 சீசனின் இறுதிப் போட்டி ஐதராபாத் ராஜிவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ்க்கு எதிராக மும்பை இந்தியன்ஸ் தலைவர் ரோகித் சர்மா நாணய சுழற்சியை வென்று துடுப்பெடுத்தாட்டத்தை தேர்வு செய்தார். மும்பை இந்தியன்ஸ் அணியில் ஜயந்த் யாதவ் நீக்கப்பட்டு மெக்ளெனகன் சேர்க்கப்பட்டார். சென்னை அணியில் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை. 


மும்பை இந்தியன்ஸ் அணியின் டி காக், ரோகித் சர்மா ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். முதல் ஓவரை தீபக் சாஹர் வீசினார். இந்த ஓவரில் இரண்டு ஓட்டங்கள் கொடுத்தார். அடுத்த ஓவரை சர்துல் தாகூர் வீசினார். இந்த ஓவரில் ரோகித் சர்மா ஒரு சிக்ஸ் விளாசினார். தீபக் சாஹர் வீசிய 3-வது ஓவரில் டி காக் மூன்று சிக்ஸ் விளாசினார். இதனால் மும்பை இந்தியன்ஸ் 3 ஓவரில் 30 ஓட்டங்களை தொட்டது. 



டி காக் விஸ்வரூபம் எடுப்பார் என்று நினைக்கையில், சர்துல் தாகூர் வீசிய ஐந்தாவது ஓவரின் ஐந்தாவது பந்தில் டோனியிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அவர் 17 பந்தில் 4 சிக்சருடன் இந்த ஓட்டங்களை எடுத்தார். அடுத்த ஓவரை தீபக் சாஹர் வீசினார். இந்த ஓவரின் 2-வது பந்தில் ஹிட்மேன் ரோகித் சர்மா எம்எஸ் டோனியிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அப்போது மும்பை இந்தியன்ஸ் அணியின் ஸ்கோர் 5.2 ஓவரில் 45 ஓட்டங்களாக இருந்தது. 



3-வது விக்கெட்டுக்கு சூர்யகுமார் யாதவ் உடன் இஷான் கிஷன் ஜோடி சேர்ந்தார். தொடக்க ஜோடி ஆட்டமிழந்ததும், மும்பை இந்தியன்ஸ் அணியின் ஸ்கோர் அப்படியே படுத்துவிட்டது. அந்த அணி 7 ஓவரில் 50 ஓட்டங்களை தொட்டது. 



மிடில் ஆர்டர் துடுப்பாட்டகாரர்களான சூர்யகுமார் யாதவ் 15 ஓட்டங்களிலும், இஷான் கிஷன் 23 ஓட்டங்களிலும், குருணால் பாண்டியா 7 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர். மும்பை 14.1 ஓவரில் 100 ஓட்டங்களைத் தொட்டது. 3-வது விக்கெட்டுக்கு சூர்யகுமார் யாதவ் - இஷான் கிஷன் ஜோடி 36 பந்தில் 37 ஓட்டங்களே எடுத்தது. 



6-வது விக்கெட்டுக்கு பொல்லார்டு உடன் ஹர்திக் பாண்டியா ஜோடி சேர்ந்தார். அப்போது 14.4 ஓவரில் மும்பை இந்தியன்ஸ் 5 விக்கெட் இழப்பிற்கு 101 ஓட்டங்கள் எடுத்திருந்தது. 



பொல்லார்டு அவ்வப்போது சிக்ஸ் தூக்கி மும்பை இந்தியன்ஸ் அணியின் ஸ்கோர் மெல்ல உயர்ந்தது. 18-வது ஓவரில் இருவரும் தலா ஒரு சிக்ஸ் தூக்கினர். 19-வது ஓவரை தீபக் சாஹர் வீசினார். முதல் பந்தை ஹர்திக் பாண்டியா சிக்சருக்கு தூக்கினார். 2-வது பந்தில் எல்பிடபிள்யூ ஆனார். அப்போது மும்பை இந்தியன்ஸ் 18.2 ஓவரில் 140 ஓட்டங்கள் எடுத்திருந்தது. 4-வது பந்தில் சாஹர் ஆட்டமிழந்தார். கடைசி 4 பந்திலும் சாஹர் ரன் விட்டுக்கொடுக்கவில்லை. 



கடைசி ஓவரில் சென்னை சூப்பர் கிங்ஸ் 8 ஓட்டங்கள் விட்டுக்கொடுக்க மும்பை இந்தியன்ஸ் 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 149 ஓட்டங்கள்கள் எடுத்தது. பொல்லார்டு 25 பந்தில் தலா மூன்று பவுண்டரி, 3 சிக்சருடன் 41 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். 



இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு 150 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது மும்பை இந்தியன்ஸ் 



151 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அணி களமிறங்கியது. வாட்சன், டு பிளிசிஸ் ஜோடி அதிரடியாக விளையாடினர். டு பிளிசிஸ் 13 பந்துகளில் 26 ஓட்டங்கள் எடுத்த நிலையில் குர்ணால் பாண்டியா ஓவரில் ஸ்டேம்பிங் என்ற முறையில் வெளியேறினார். அடுத்த வந்த ரெய்னா 14 பந்துகளில் 8 ஓட்டங்களும் ராயுடு 1 ஓட்டங்களிலும் டோனி 2 ஓட்டங்களிலும் வெளியேறினர். இதனால் ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. 



சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 15 ஓவர்களில் 88 ஓட்டங்கள்கள் மட்டுமே எடுத்தது. மலிங்கா வீசிய 16 ஓவரில் பிராவோ ஒரு சிக்சர் வாட்சன் 3 பவுண்டரிகள் அடிக்க சென்னை அணி 16 ஓவரில் 108 ஓட்டங்கள் குவித்தது. வாட்சனுக்கு 3 கேட்சகளை தவற விட்டனர் மும்பை இந்தியன்ஸ் அணி. 



சென்னை அணிக்கு 18 பந்துகளில் 38 ஓட்டங்கள் தேவைப்பட்டது. குர்ணால் பாண்டியா வீசிய 17-வது ஓவரில் வாட்சன் 3 சிக்ஸ் விளாசினார். இதனால் சென்னை அணிக்கு 12 பந்துகளில் 18 மட்டுமே தேவைப்பட்டது. 



கடைசி ஓவரில் 9 ஓட்டங்கள் மட்டுமே தேவைப்பட்ட நிலையில் 1 ஓட்ட வித்தியாசத்தில் சென்னை அணியை வீழ்த்தி 4-வது முறையாக மும்பை அணி ஐபிஎல் கிண்ணத்தை வென்றது. 



(மாலைமலர்)

Friday, May 10, 2019

மேட்ச் பிக்சிங்... இலங்கை முன்னாள் வீரர்கள் இருவர் சிக்கினர்

மேட்ச் பிக்சிங்... இலங்கை முன்னாள் வீரர்கள் இருவர் சிக்கினர்

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்களான அவஷ்கா குணவர்த்தன மற்றும் நுவன் சோய்சா மேட்ச் பிக்சிங்கில் ஈடுப்பட்டதாக சர்வதேச கிரிக்கெட் ஆணையம் குற்றம்சாட்டியுள்ளது.
கடந்த டிசம்பர் மாதம் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்த டி10 லீக் போட்டியில் மேட்ச் பிக்சிங்கில் ஈடுப்பட்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இலங்கையின் முன்னாள் பந்து வீச்சாளரான நுவன் சோய்சா, ஐசிசி-யின் ஊழல் தடுப்பு விதிகளை மீறியதாக மூன்று பிரிவுகளில் குற்றம்சாட்டப்பட்டு கடந்த நவம்பர் மாதம் இடைநீக்கம் செய்யப்பட்டார். தற்போது நான்காவது பிரிவாக ஐக்கிய அரபு அமீரகத்தின் ஊழல் தடுப்பு விதியை மீறியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இலங்கை அணியின் முன்னாள் ஆரம்ப துடுப்பாட்டகாரரான அவஷ்கா குணவர்த்தன மீது இரண்டு பிரிவுகளில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இருவரும் தற்காலிகமாக இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில் 14 நாட்களுக்குள் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்க ஐசிசி அவகாசம் அளித்துள்ளது.

Thursday, May 9, 2019

2 நிமிடங்களில் சாதனை படைத்த - IPL விபரம் உள்ளே

2 நிமிடங்களில் சாதனை படைத்த - IPL விபரம் உள்ளே

ஐ.பி.எல். இறுதிப் போட்டிக்கான அனைத்து இணையத்தளமூடான நுழைவுச் சீட்டுகளும் 2 நிமிடங்களில் விற்றுத்  தீர்க்கப்பட்டுள்ளதனால், ரசிகர்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.



ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி மைதானத்தில் எதிர்வரும் 12 ஆம் திகதி ஐ.பி.எல். இறுதிப்போட்டி இடம்பெறவுள்ளது. அந்த மைதானத்தில் 39 ஆயிரம் பேர் அமர்ந்து பார்க்கும் வகையில் ஆசன வசதியுள்ளது. இந்திய ரூபாவில் ஆயிரம் முதல் 22 ஆயிரம் வரை 9 வகையிலான நுழைவுச்சீட்டுகள் உள்ளன.
இந் நிலையில் இணைத்தளமூடான நுழைவுச் சீட்டு விற்பனையாது ஈவெண்ட்ஸ் நவ் என்ற தனியார் நிறுவனத்திடம் கொடுக்கப்பட்டது. நேற்றுமுன்தினம் அந்த நிறுவனம் இணையத்தளமூடான ‍அனைத்து நுழைவுச் சீட்டுக்களையும் 2 நிமிடங்களில் விற்றுத்  தீர்த்துவிட்டதாக அறிவித்தது.
இந்த அறிவிப்பை கேள்வியுற்ற ரசிகர்கள் பெரும் அதிர்ச்சிக்குள்ளானதுடன், கள்ளச்சந்தை நுழைந்திருப்பதாக ரசிகர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

Friday, May 3, 2019

உலகக் கிண்ணத்துக்கான இலங்கை அணியின் ஜேசி!

உலகக் கிண்ணத்துக்கான இலங்கை அணியின் ஜேசி!

2019 ஆம் ஆணடுக்கான உலகக் கிண்ணத் தொடரானது எதிர்வரும் மே மாதம் 30 ஆம் திகதி இங்கிலாந்தில் ஆரம்பமாகவுள்ளது.



இந் நிலையில் இதில் கலந்துகொள்ளும் இலங்கை கிரிக்கெட் அணியினரின் உத்தியோகபூர்வ ஜேசியையும், பயிற்சி ஜேசியையும்  (Jersey) இலங்கை கிரிக்கெட் நிறுவனம் வெளியிட்டுள்ளது.



Monday, April 29, 2019

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 45 ஓட்டங்களால் வெற்றி

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 45 ஓட்டங்களால் வெற்றி

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிராக நேற்று இடம்பெற்ற ஐபிஎல் தொடரின் போட்டியில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 45 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் முதலில் துடுப்பாடிய சன்ரைசர்ஸ் அணி 20 ஓவர்களில் 6 விக்கட்டுகளை இழந்து 212 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

டேவிட் வோர்னர் 56 பந்துகளில் 81 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்தார்.

பதிலளித்தாடிய கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி, 20 ஓவர்களில் 8 விக்கட்டுகளை இழந்து 167 ஓட்டங்களை மாத்திரமே பெற்று தோல்வி கண்டது.

ஆட்ட நாயகனாக டேவிட் வோர்னர் தெரிவானார்.

இதேவேளை, உலக கிண்ண கிரிக்கட் தொடருக்கான குழாமில் இணைக்கப்பட்டுள்ள பாகிஸ்தானிய வீரர் சொஹைப் மலிக்கிற்கு அந்த நாட்டின் கிரிக்கட் சபை 10 நாட்கள் விடுமுறை வழங்கியுள்ளது.

அவரது தனிப்பட்ட பிரச்சினைகளை தீர்த்துக்கொள்வதற்காக இந்த விடுமுறை வழங்கப்பட்டிருப்பதாக பாகிஸ்தான் கிரிக்கட் சபை தெரிவித்துள்ளது.

எனினும் உண்மையான காரணம் கூறப்படவில்லை.

இந்த நிலையில் இங்கிலாந்து அணிக்கு எதிராக இந்தவாரம் நடைபெறவுள்ள 20க்கு20 கிரிக்கட் போட்டி மற்றும் முதலாவது ஒருநாள் போட்டியிலும் அவர் விளையாடமாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் அவர் பாகிஸ்தான் அணியுடன் இணைந்துக் கொள்வார் என்றும் நம்பப்படுகிறது.
இலங்கை – பாகிஸ்தான் இடையேயான இளையோர் கிரிக்கெட் தொடரை பிற்போட தீர்மானம்

இலங்கை – பாகிஸ்தான் இடையேயான இளையோர் கிரிக்கெட் தொடரை பிற்போட தீர்மானம்

நாட்டில் ஏற்பட்டுள்ள நிலைமையை கருத்தில்கொண்டு 19 வயதுக்குட்பட்ட பாகிஸ்தான் கிரிக்கெட் அணியுடனான போட்டித் தொடரை காலவரையறையின்றி பிற்போடுவதற்கு, இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தீர்மானித்துள்ளது.
இரண்டு டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் எதிர்வரும் மே மாதம் 3ஆம் திகதி ஆரம்பமாகவிருந்தது.
இதில் பங்கேற்பதற்காக 19 வயதுக்குட்பட்ட பாகிஸ்தான் கிரிக்கெட் அணி நாளை மறுதினம் நாட்டிற்கு வருகை தரவிருந்தமை குறிப்பிடத்தக்கது

Wednesday, May 30, 2018

நல்லாட்சி அரசாங்கம் கிரிக்கெட்டை சூதாட்டக்காரர்களிடம் கொடுத்தது

நல்லாட்சி அரசாங்கம் கிரிக்கெட்டை சூதாட்டக்காரர்களிடம் கொடுத்தது

நல்லாட்சி அரசாங்கம் கிரிக்கெட்டை சூதாட்டக்காரர்களின் கையில் கொடுத்து அதனை அழித்துவிட்டது என அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் அவர் இதனை தெரிவித்துள்ளார்
2015ஆம் ஆண்டு நாங்கள் அரசாங்கத்தை அமைத்தபோது கிரிக்கெட் விளையாட்டு ஒரு நல்ல நிலையில் இருந்தது. நாங்கள் உலக டெஸ்ட் போட்டியில் 3வது மற்றும் 4 இடத்தில இருந்தோம். 20க்கு 20 போட்டியில் முதலிடத்தில் இருந்தோம். 
எமது அரசாங்கம் வந்த பின் இந்த கிரிக்கெட்டை தேவையற்ற நிர்வாகத்திற்கு ஒப்படைத்து இன்று கீழ்நிலைக்கு சென்றுள்ளது.
இது தொடர்பாக நான் கவலைபடுகின்றேன். நான் அமைதியாக இருக்கவில்லை நான் இது தொடர்பாக ஊடகங்களுக்கு தெளிவுபடுத்தியுள்ளேன். அது மட்டுமல்லாது ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் எழுத்துமூலமாக விளக்கம் கொடுத்துள்ளேன்.
அதுமட்டுமல்ல முன்னால் அமைச்சருக்கும் இதுதொடர்பாக தெளிவுபடுத்தியுள்ளேன். துரதிஷ்டவசமாக இதற்காக குரல்கொடுக்க எவரும் முன்வரவில்லை. இதனால் டெஸ் போட்டி தரவரிசையில் 7 அல்லது 8 ஆம் இடத்தில் இருக்கின்றோம்.
20 க்கு 20 நாங்கள் முதலிடத்தில் இருந்தோம் ஆனால் தற்போது ஆப்கானிஸ்தானை விட கீழே உள்ளோம். ஆனால் இந்த நிர்வாகத்தில் உள்ளவர்கள் தெரிவிக்கிறார்கள் நாங்கள் இலாபமடைந்துள்ளோம். இதில் காட்ட முனைவது இன்று கிரிக்கெட் வியாபாமாக மாறியுள்ளது. நிறைய விளையாட்டுக்களில் விசேடமாக இந்தியா இங்கு வரும்போது தொலைக்காட்சி டென்டர் மூலமாக நிறைய பணம் கிடைக்கும். இதைத்தான் இவர்கள் பேசுகின்றனர்.
ஆனால் இன்று ஆடுகள மைதானத்தை தீர்மானிப்பது நிருவாகத்திற்கு ஏற்றாட்போலவாகும். விளையாடடு வீரர்களுக்கு ஏற்றால் போல் அல்ல. 
நான் சின்ன பதிவை பார்த்தேன். லசித் மாலிங்க ஒரு நேர்காணலில் சொல்லியிருந்தார் ஆடுகள மைதானத்தை மாற்றம் செய்தமை தொடர்பாக. இன்றுவரை இது தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளது.
இப்படி கிரிக்கெட் நிர்வாகம் இருந்தால் கிரிக்கெட் அழியும். எதிர்காலத்தை பற்றி சிந்திக்காத நபர்களே இன்று உள்ளனர் கிரிக்கட் நிர்வாகத்தில் உள்ள சிலர் உலக கிரிக்கெட் கவுன்சிலுக்கு தகுதிபெற நினைக்கின்றார்கள். களுத்துறை பணந்துரை போட்டி தொடர்பான அறிக்கையை முன்னாள் அமைச்சர் மற்றும் நிர்வாகம் மறைத்திருந்தது. கிரிக்கெட் சங்கங்களிக்கிடையிலான விளையாட்டை மாற்றி அமைக்க முடியுமாயின். இது நிர்வாகத்தின் சீர்கேடாகும்.
நானும் நல்லாட்சி அரசாங்கத்தை கொண்டுவந்தவன். ஆனால் இந்த அரசாங்கமோ சூதாட்ட காரர்களுக்கு கொடுத்து கிரிக்கெட்டை அழித்துவிட்டது.' என்றார்

arrow_upward