Showing posts with label INDIA. Show all posts
Showing posts with label INDIA. Show all posts

Monday, June 3, 2019

முஸ்லிம்கள் மீதான நவ பாசிச, வெறுப்பு அரசியலை கைவிடுங்கள்

முஸ்லிம்கள் மீதான நவ பாசிச, வெறுப்பு அரசியலை கைவிடுங்கள்

ஒருதமிழனாய் சிங்கள தேசிய வாதிகளுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில் நடக்கும் மோதல் வடிவம் புதியது என்பதை உணர்கிறேன். சிங்கள ஆழும் சக்திகள் தமிழருடன் இனரீதியான மோதலிலும் பலப்பரீட்சையிலுமே ஈடுபட்டனர். சலுகைகளை நிராகரித்த, அபிவிருக்திகளை பலி கொடுத்த தமிழர் போராட்டங்கள் சிங்கள ஆழும்சக்திகளுக்கு அதிக தெரிவை கொடுக்கவில்லை. 

ஈஸ்ட்டர் தாக்குதலால் நிலைகுலைந்த சிங்கள ஆழும் சக்திகள் அதன் பின்னர் முஸ்லிம்களோடு மோதுகிற வடிவம் வேறு என்பது புலனாகிறது. 1960பதுகளின் முன்னம் அமரிக்க நிறவாதா ஆதிக்கம் கறுப்பர்கள் மீது கட்டவிழ்த்த வெறுப்பு அரசியலின் அம்சங்கள் தெளிவாக இருக்கு. சிங்கள ஆழும் சக்திகளின் தமிழருடனான மோதல் போல முஸ்லிம்களுடனான மோதல் எனக்கு ஓமர் முத்தார் Omar Mukhtar போன்ற படங்களை நினைவு படுத்தவில்லை. மிசிசிப்பி எரிகிறது Mississippi Burning (1988) படத்தைத்தான் நினைவு படுத்துகிறது. இது மிகவும் பரிதாபகரமான நிலமையாகும். பெண்களை இலக்காக்குவது வெறுப்பு அரசியலின் மிக மோசமான வடிவமாகும். அது மனுக்குலத்துக்கு எதிரான குற்றச் செயலாகும். 

சிங்கள பேரினவாதிகளின் தமிழருடனான பலபரீட்ச்சை மோதல் அரசியலுக்கும் முஸ்லிம்களுடனான -1960 களின் அமரிக்க நிறவாதிகளின் மோதல்போன்ற - வெறுப்பு அரசியல் மோதல் வடிவத்துக்கும் இடையில் அமைப்பு ரீதியான அடிப்படை வேறுபாடுகள் உள்ளது. தமிழருடன் இனப் பலபரிட்ச்சை இது நவ பாசிச தன்மையுள்ள இனவாத வெறுப்பு. சிங்கள தேசிய வாதத்தின் ஆபத்தான புதிய வளர்ச்சியை அதன் அரசியலை சர்வதேச ரீயாக அம்மணமாக்கவேண்டும்

Friday, May 31, 2019

Bigg Boss 3 ஆரம்பமாகும் திகதி அறிவிப்பு

Bigg Boss 3 ஆரம்பமாகும் திகதி அறிவிப்பு

Bigg Boss 3: நடிகர் கமல் கடந்த 2017 ஆம் ஆண்டு சின்னத்திரை தொகுப்பாளராக அறிமுகமானார்.
தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியை அவர் தொகுத்து வழங்கினார். முதன்முதலில் தமிழுக்கு அறிமுகமான அந்நிகழ்ச்சி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.
இதைத் தொடர்ந்து கடந்தாண்டு பிக்பாஸ் 2 நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கினார் கமல். இது முதல் சீசன் போல் அவ்வளவு சுவாரஸ்யமாக இல்லாமல் இருந்தது.

இதற்கிடையே மக்களவை மற்றும், சட்டமன்ற இடைத்தேர்தல்களில் படு பிஸியானார் கமல். அதோடு தனது கட்சியான மக்கள் நீதி மய்யத்தை மெருகேற்றுவதில் கவனம் செலுத்தினார்.
இதன் காரணமாக, பிக்பாஸ் 3 நிகழ்ச்சியை கமல் தொகுத்து வழங்க மாட்டார் என்ற கருத்துகள் நிலவி வந்தன.
ஆனால் சில தினங்களுக்கு முன்பு இதன் ப்ரோமோ வெளியாகி, அந்த வதந்திக்கு முற்றுபுள்ளி வைத்தது.
இந்நிலையில் இந்நிகழ்ச்சி வரும் ஜூன் 23 முதல் ஒளிபரப்பாவதாக தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் போட்டியாளர்கள் யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் நிலவி வருகிறது

Monday, May 27, 2019

மகனுக்கு பசிக்குமென்று சமைத்து வைத்துவிட்டு இறந்து போன தாய்..!! இது கதையல்ல நிஜம்…!

மகனுக்கு பசிக்குமென்று சமைத்து வைத்துவிட்டு இறந்து போன தாய்..!! இது கதையல்ல நிஜம்…!

இந்தப் பதிவு உங்களை நிச்சயமாக சோகத்தில் ஆழ்த்தும் ஒரு பதிவாக இருக்கக்கூடும். மேலும், இந்த பதிவின் மூலம் ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் வயதான பெற்றோர் எவ்வளவு முக்கியமானவர்கள் என்பதையும் உணர்த்தும்.ஒரு வயது முதிர்ந்த தாய், தனது அன்பு மகனுக்காக உணவு சமைத்து வைத்து விட்டு அவன் வருகைக்காக பொறுமையுடன் காத்துக் கொண்டிருக்கிறாள். ஆனால், மகன் வரவே இல்லை. இந்த குறிப்பிட்ட வழக்கு உங்கள் கண்களில் கண்ணீரை வரவழைக்கும். அதுவும் நீங்கள் உங்கள் குடும்பத்தைப் பிரிந்து தனியாக வேலை செய்பவராக இருந்தால், உங்கள் குடும்பத்துடன் மிக குறைந்த அளவு நேரம் செலவிடுபவராக இருந்தால், நிச்சயம் இந்தப் பதிவு உங்களை பாதிக்கும்.

தாயும் மகனும் :ஒரு பெண் தனது கணவனிடம் விவாகரத்து பெற்ற பிறகு தனி ஆளாக நின்று தன் மகனை வளர்த்து ஆளாக்குகிறாள். மகனும் நல்லபடியாக வளர்ந்து வேலை நிமித்தமாக வேறு ஊருக்கு சென்று விடுகிறான். அந்த தாய் அவள் வீட்டில் தனிமையில் வாழ்ந்து கொண்டிருக்கிறாள். அவளுக்கு வயது முதிர்ந்து விட்டது. இந்த இளம் வாலிபன் வார இறுதியில் தனது தாயைக் காண வந்து போகிறான்.நாட்கள் செல்லச் செல்ல, வேலைப் பளு அதிகரிப்பதன் காரணமாக தாயைக் காண வரும் அவன் பயணம் அவ்வப்போது தடைபடுகிறது. ஒவ்வொரு வாரமும் தவறாமல் வந்து சென்று கொண்டிருந்த மகன், தொடர்ந்து சில மாதங்கள் கூட வர முடியாமல் போகிறது. ஆனால், அந்தத் தாய் தன் மகனின் இந்த செய்கை குறித்து ஒரு போதும் குறை கூறாமல், அமைதியாக பொறுமையாக மகனின் வரவுக்காகக் காத்திருந்தாள்.மகிழ்ச்சியில் தாய் :அன்னையர் தினத்தன்று தனது தாயுடன் முழு நாளையும் செலவிட வேண்டும் என்ற எண்ணத்தை அந்த மகன் தன் தாயிடம் தெரிவித்தான். மேலும் ,அவனுக்கு பிடித்த உணவுகளை சமைத்து வைக்குமாறு தாயிடம் கூறி இருந்தான். இதனைக் கேட்டதும் அந்தத் தாய் மிகவும் மகிழ்ச்சி கொண்டாள். நீண்ட நாட்களுக்குப் பிறகு தனது மகன் வருவதை நினைத்து, மிகவும் ஆனந்தமாக இருந்தாள். அன்னையர் தினத்தன்று காலை முதல் தனது மகனுக்குப் பிடித்த உணவு வகைகளைச் சமைக்கத் தொடங்கினாள்.

ஆசை, ஆசையாய் சமையல்: மகனுக்கு பிடித்தமான உணவு முழுவதும் சமைத்தவுடன், எல்லாவற்றையும் டைனிங் டேபிளில் அடுக்கி வைத்துவிட்டு, குளிப்பதற்காக குளியலறைக்கு சென்றாள். குளிக்கும்போது, அவளுக்கு தீவிர மாரடைப்பு ஏற்பட்டு இதயம் செயலிழந்தது. வீட்டில் யாருமில்லாமல், தனியாக இருந்ததால் உயிருக்கு போராடி அவள் தோற்றுவிட்டாள். ஆம், அந்தத் தாய் இறந்து விட்டாள்.சில தினங்கள் கழித்து, பக்கத்து வீடுகளில் இருப்பவர்கள் இந்த வீட்டில் இருந்து ஒரு வித துர்நாற்றம் வீசுவதாக போலீசில் புகார் தெரிவித்தனர். போலிஸ் உடனடியாக வந்து இவர்கள் வீட்டு கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அனைவருக்கும் ஒரே அதிர்ச்சி. அந்தத் தாயின் உடல் முழுவதும் புழுக்களால் நிரம்பி இருந்தது. அந்தத் தாய் இறந்து கிடந்தாள். 

அவள் இறந்து நான்கு நாட்கள் ஆனது அப்போது தெரிய வந்தது. போலீசார் அவளின் மகனுக்கு அந்தத் தாயின் மரணம் குறித்து தகவல் தெரிவித்தனர்.தாயின் மரணச் செய்தி அறிந்த மகன் துடிதுடித்துப் போனான். அன்னையர் தினத்தன்று தன் தாயைக் காண வரவிருந்ததாகவும், வேலை அதிகம் இருந்ததால் தற்போது வரை தான் சொன்ன வாக்கை காப்பாற்ற முடியாமல் போனதாகவும், அவன் அப்போது தெரிவித்தான். உடனே அவன் தன்னுடைய வீடு வந்து சேர்ந்தான். 

டைனிங் டேபிளில் தனக்காக சமைத்து வைக்கப்பட்ட உணவு வகைகளைப் பார்த்தவுடன் தன் தாயின் அன்பை எண்ணி உடைந்து அழுதான். வயதான பெற்றோருடன் நேரம் செலவிடுவதை விட, எந்த ஒரு வேலையும் முக்கியமானது இல்லை என்பதை, இந்த உலகிற்கு உணர்த்த விரும்புவதாக அந்த மகன் கூறினான்.இந்தப் பதிவைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பதை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.