அளுத்கமை கலவரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முழுமையான நஷ்டஈடு வழங்கப்படவில்லை.
திகண கலவரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முழுமையான நஷ்டஈடு வழங்கப்படவில்லை.
குருநாகல் கலவரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முழுமையான நஷ்டஈடு வழங்கப்படப் போவதுமில்லை.....
எமது நாட்டிற்கு விசுவாசமான குடிமக்களாக இருப்பதற்கு இன்னும் எத்தனை விடயங்களில் நாம் குட்டக் குட்டக் குணியப் போகிறோம். நாம் பழிவாங்கப் போவதில்லை, ஆயுதப் போராட்டம் செய்யப் போவதில்லை. ஆனால் எமக்கான உரிமைகளை எப்போதும் போல் இனியும் இழக்கக்கூடாது.
அஸ்ஸலாமு அலைக்கும்
வருடா வருடம் இலங்கைக்கான இலண்டன் தூதரகம் முஸ்லிம்களை அழைத்து இப்தார் நிகழ்வு நடாத்தி வருவதை அனைவரும் நன்கறிவீர்கள். திகண கலவரத்திற்கு நஷ்ட ஈடு கோரியும், கலகக்காரர்களுக்கு உரிய தண்டனைகளைக் கோரியும் தூதரகத்தினுடை கடந்த வருட இப்தார் நிகழ்வை எமது SLMDI UK அமைப்பு பகிஷ்கரித்திருந்தது.
அவ்வகையில் எதிர்வரும் 22ம் திகதி தூதரகத்தில் இடம்பெறவுள்ள இப்தார் நிகழ்வையும் இன்ஷா அல்லாஹ் எமது அமைப்பு பகிஷ்கரிக்கின்றது. எமது மக்களுக்கான போராட்டத்தில் என்றென்றும் எமது அமைப்பு முன்நிற்கும். இன்ஷா அல்லாஹ்.
- SLMDI UK

0 comments: