டிசம்பர் 31ம் தேதியோடு வாட்ஸ் ஆப் சேவை விண்டோஸ் ஸ்மார்ட்போன்களில் முடிவுக்கு வருகின்றது. இந்த செயலியால் ஏராளமானனோர் பயன்படைந்து வந்தனர்.
இந்நிலையில், பேஸ்புக் நிறுவனம் பழைய செயல்திறன் போன்களில் வாட்ஸ் ஆப்பின் புதிய அப்டேட்கள் வராது என்றும் அறிவித்துள்ளது.
வாட்ஸ் ஆப் செயலி:
வாட்ஸ் ஆப் செயலி உலகம் முழுக்க பரவலாக பயன்படுத்தப்படுகின்றது. இதில் இருந்து குறுஞ் செய்தி மற்றும் வீடியோ, ஆடியோ புகைப்படம் உள்ளிட்டவைகளை தனிநபருக்கோ இல்லை. குழுவுக்கோ எளிதாக பரிமாறிக் கொள்ள முடியும்.
இந்தியாவில் அதிக பயன்பாடு :
இந்தியாவில் மக்கள் தொகையை விட செல்போன் பயன்பாடே அதிகமாக இருக்கின்றது. மேலும், மற்ற நாடுகளை காட்டிலும், இந்தியாவில் தான் வாட்ஸ் ஆப்பை பயன்படுத்துவதாக ஆய்வறிக்கைகளில் கூறப்பட்டுள்ளது.
பேஸ்புக் அறிவிப்பு:
வாட்ஸ் ஆப் தொடர்ந்து அப்டேட் செய்யப்பட்டு வருகின்றது. இதனால் சில பழைய செயல் திறன் போன்களில் வாட்ஸ் ஆப் புதிய அப்டேட்கள் வராது என பேஸ்புக் நிறுவனம் முன்பே அறிவித்துள்ளது.
ஜனவரி 1 முதல் இடம் பெறாது:
அந்த வகையில் அடுத்த ஆண்டு ஜனவரி 1ம் தேதி முதல் வாட்ஸ் ஆப் அப்டேட் விண்டேஸ் போன்களில் இடம்பெறாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அடியோடு முடக்கம்:
அப்டேட்கள் மட்டும் இன்றி விண்டோஸ் ஸ்மார்ட்போன்களில் வாட்ஸ் ஆப் சேவை முற்றிலுமாக நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
புதிய செயலி உருவாக்கம்:
இதனை சரி செய்ய யூனிவேர்சல் விண்டோஸ் பிளாட் பார்ம் என்ற செயிலயை வாட்ஸ் ஆப் உருவாக்கி வருகிறது. இதன் மூலம் புது மாடல் விண்டோஸ் போன்களில் வாட்ஸ் ஆப்பை பயன்படுத்த முடியும்.

0 comments: