Friday, May 10, 2019

ரயில் பயணிகளின் பாதுகாப்புக்கு 210 புதிய அதிகாரிகளுக்கான விண்ணப்பங்கள் கோரப்படவுள்ளன


ரயில் நிலையங்கள் உள்ளிட்ட இடங்களில் பொதுமக்களின் பாதுகாப்பிற்காக முறையான பல்வேறு வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது என்று ரயில்வே பொது முகாமையாளர் டிலந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். 

இதற்காக ரயில்வே பாதுகாப்புப் பிரிவில் 210 புதிய அதிகாரிகள் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார்கள். அதற்காக தற்போதும் விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. 

ரயில்வே பாதுகாப்புப் பிரிவில் காணப்படும் குறைபாடுகளை விரைவில் நிவர்த்தி செய்யுமாறு அமைச்சர் அர்ஜூண ரணதுங்க ஆலோசனை வழங்கியுள்ளார். 

அரச தகவல் திணைக்களம்

Author: verified_user

0 comments: