இந்தியா - தமிழ் நாடு, சென்னையில் உள்ள கோயம்பேடு சந்தையில் பெண்ணின் சடலம் கோணிப்பையில் இருந்து பொலிஸாரால் மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சூளைமேட்டை சேர்ந்த மேல்விழி என்பவரை நேற்று முதல் காணவில்லை என அவரது பெற்றோர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் பொலிஸார் சந்தேகத்தின் பேரில் அஜித்குமார் என்பவரை கைது செய்து விசாரணை செய்துள்ளனர்.
பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் அஜித்குமார் மேல்விழியை கொலை செய்து கோணிப்பையில் கட்டி கோயம்பேடு சந்தையில் வைத்து விட்டு வந்ததாக தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, பொலிஸார் கோயம்பேட்டில் உள்ள மேல்விழியின் சடலத்தை மீட்டதோடு கொலைக்கான காரணத்தை அஜித்குமாரிடம் விசாரித்து வருகின்றனர்.

0 comments: