Showing posts with label sr. Show all posts
Showing posts with label sr. Show all posts

Monday, June 10, 2019

அரபு மொழியை விட்டுக்கொடுக்கலாமா..? அழுத்தங்களை பிரயோகிக்க முஸ்லிம் தலைவர்கள் முன்வருவார்களா..??

அரபு மொழியை விட்டுக்கொடுக்கலாமா..? அழுத்தங்களை பிரயோகிக்க முஸ்லிம் தலைவர்கள் முன்வருவார்களா..??

இலங்கையில் O/L, A/L, பாடசாலை கற்கை நெறிகளில் அரபு சட்ட ரீதியாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு பாடமாக காணப்படுகிறது. பாடசாலைகளிலும் கற்பிக்கப்படுகிறது.

பல்கலைக்கழகங்களில் அரபு கற்கைநெறி சட்ட ரீதியாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையில் அரபுமொழி சட்டரீதியான அங்கீகாரம் பெற்றுள்ளது.

வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தில் அரபுமொழி வெளிநாடு செல்லும் பணிப்பெண்கள், ஏனையவர்களுக்கும் கற்பிக்கப்படுகிறது.

இலங்கையில் அரபு நாட்டு தூதரகங்கள் சட்ட ரீதியாக காணப்படுகிறது.

அரசாங்கத்தினால் மௌலவி ஆசிரியர்கள், அரபு மொழி கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான நியமனங்கள் சட்டரீதியாக வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு சட்டரீதியான அனைத்து அனுமதிகளும் செயற்பாடுகளும் அரபு மொழியில் இருக்கின்ற போது, அரபு மொழியை தடைசெய்ய வேண்டும் என்று எவ்வாறு பிரேரணையை நிறைவேற்ற முடியும்?

ஆகவே பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு உடனடியாக அரபு மொழி தொடர்பான விடயங்களுக்கு நடவடிக்கைகள் எடுத்து சரியான சுற்று நிரூபம் ஒன்றை வெளியிடுவதற்கு முஸ்லிம் அரசியல் தலைவர்கள் பிரதமரை சந்தித்து உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டியது காலத்தின் தேவையாகும்.

உங்களால் நடவடிக்கை எடுக்கா முடியாவிட்டால் அரபு நாட்டு தூரகங்களையும், தலைவர்களையும் சந்தித்து இது தொடர்பான பிரச்சினையை முன்வைத்து அரசாங்கத்துக்கு உரிய அழுத்தங்களை வழங்குங்கள்

-ஸக்கீ செய்ன்-