Nation Lanka News : SPORTS NEWS

Showing posts with label SPORTS NEWS. Show all posts
Showing posts with label SPORTS NEWS. Show all posts

Saturday, August 31, 2019

நியூஸிலாந்துடனான 20 :20 தொடர் இன்று ஆரம்பம்

நியூஸிலாந்துடனான 20 :20 தொடர் இன்று ஆரம்பம்

இலங்கை மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட சர்வதேச இருபதுக்கு - 20 கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி இன்று ஆரம்பமாகவுள்ளது.

அதன்படி இப் போட்டியானது இன்றிரவு 7.00 மணிக்கு கண்டி பல்லேகல மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.
இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள நியூஸிலாந்து கிரிக்கெட் அணியானது இலங்கை அணியுடன் டெஸ்ட் மற்றும் இருபதுக்கு - 20 போட்டிகளில் விளையாடி வருகிறது.

இதில் நடைபெற்று முடிந்த டெஸ்ட் தொடரானது 1:1 என்ற கணக்கில் சமநிலையில் முடிந்த இருபதுக்கு - 20 தொடரின் முதல் போட்டி இன்றைய தினம் ஆரம்பமாகிறது. 
இத் தொடரானது இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு மிக முக்கியமான தொடராக அமையவிருக்கின்றது. இரு தரப்பு தொடர் என்பதை தவிர்த்து, அடுத்த வருடம் அவுஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள இருபதுக்கு - 20 உலகக் கிண்ணத்துக்கான அடித்தளமாக இந்த தொடர் அமையவிருக்கின்றது.
இருபதுக்கு - 20  உலகக் கிண்ணத்தை கருத்திற்கொண்டுள்ள இரண்டு அணிகளும் புதிய சில வீரர்களை அணிக்குள் அழைத்து மாற்றங்களுடன் களமிறங்கவுள்ளன. 
இலங்கை அணியை பொருத்தவரை, அனுபவ வீரராகவும், தலைவராகவும் லசித் மாலிங்க பொறுப்பை ஏற்றுள்ளதுடன், ஏனைய வீரர்களில் பெரும்பாலும் இளம் வீரர்களே இணைக்கப்பட்டிருக்கின்றனர். 
இதில், உள்ளூர் இருபதுக்கு - 20 போட்டிகளில் திறமைகளை வெளிப்படுத்தி வரும் வனிந்து ஹசரங்க, ஷெஹான் ஜயசூரிய மற்றும் லஹிரு மதுஷங்க ஆகியோர் அணிக்குள் அழைக்கப்பட்டுள்ளனர். இதனால், மெத்தியுஸ் மற்றும் திசர பெரேரா ஆகியோர் அணியிலிருந்து நீக்கப்பட்டிருக்கின்றனர்.
அடுத்த வருடம் அவுஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள இருபதுக்கு - 20  உலகக் கிண்ணத்துக்கு முன்னர் இலங்கை அணிக்கு 20 இற்கும் குறைவான இருபதுக்கு - 20  போட்டிகள் மாத்திரமே உள்ள நிலையில், இளம் வீரர்களை வைத்து, அனுபவ வீரர் லசித் மாலிங்க சிறந்த இருபதுக்கு - 20  அணியொன்றை உருவாக்கும் முயற்சியிலும், இந்த தொடரை வெற்றிபெற வேண்டும் என்ற முயற்சியிலும் இறங்கியுள்ளார்.
நியூசிலாந்து அணியும் தங்களுக்குள் புதிய மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. அணித் தலைவர் கேன் வில்லியம்சன் மற்றும் அனுபவ வேகப் பந்துவீச்சாளர் ட்ரென்ட் போல்ட் ஆகியோருக்கு ஓய்வு வழங்கப்பட்டு, டிம் செய்பர்ட், டார்லி மிச்சல், ஸ்கொட் குகலெய்ன் மற்றும் டொம் ப்ரூஸ் ஆகிய புதிய வீரர்கள் அணிக்குள் அழைக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு புதிய வீரர்களுடன் களமிறங்கும் நியூசிலாந்து அணியானது, இந்த தொடரின் மூலமாக தங்களுடைய எதிர்கால இருபதுக்கு - 20  வீரர்களை அடையாளம் காண்பதற்கு தயாராகியுள்ளது. பயிற்சிப் போட்டியில் மிகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்த அணி முதல் போட்டியை வெற்றியுடன் ஆரம்பிக்க காத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Friday, July 26, 2019

"பல வலிகளை அனுபவித்த மலிங்கா"

"பல வலிகளை அனுபவித்த மலிங்கா"

லசித் மலிங்கா இன்று -26- தனது கடைசி ஒருநாள் போட்டியில் விளையாடவுள்ள நிலையில் அவருக்கு சக இலங்கை வீரர் கவுசல் சில்வா வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்கா இன்று வங்கதேசத்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியுடன் ஓய்வு பெறுகிறார்.

பந்துவீச்சில் பல்வேறு சாதனைகளை படைத்துள்ள மலிங்கா குறித்து இலங்கை வீரர் கவுசல் சில்வா தனது டுவிட்டரில், நீங்கள் நாட்டுக்காக குறிப்பிடத்தக்க விடயங்கள் பலவற்றை செய்துள்ளீர்கள்.

நீங்கள் உங்கள் வாழ்க்கையில் பல வலிகளை அனுபவித்துள்ளீர்கள், பந்துவீச்சின் மூலம் நீங்கள் பல சாதனைகள் செய்துள்ளீர்கள்.

அடுத்த தலைமுறைக்கு நீங்கள் ஊக்கமளிக்கும் வழிகாட்டி என புகழாரம் சூட்டியுள்ளார்.

Friday, June 7, 2019

போட்டி கைவிடப்பட்டாலும் Sri Lanka Cricket அணிக்கு அதிர்ஷ்டம்

போட்டி கைவிடப்பட்டாலும் Sri Lanka Cricket அணிக்கு அதிர்ஷ்டம்

பிரிஸ்டோல் – கௌண்டி மைதானத்தில் நடைபெறவிருந்த இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான உலகக் கிண்ணத் தொடரின் 11வது லீக் போட்டி மைதானத்தில் உள்ள ஈரத்தன்மை காரணமாக கைவிடப்பட்டது.


அதேநேரம்,  போட்டி கைவிடப்பட்டுள்ளதுடன் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு தலா ஒவ்வொரு புள்ளிகள் பகிரப்பட்டுள்ளன. இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி இன்றைய தினம் (07) பிரிஸ்டோலில் நடைபெறவிருந்தது. சீரற்ற காலநிலை காரணமாக பாதிக்கப்பட்டதால் போட்டி நீண்ட நேரமாக இடைநிறுத்தப்பட்டிருந்தது.
எனினும் பின்னர் மழைக்காலநிலை வழமைக்கு திரும்பியதில், ஓவர்கள் குறைக்கப்பட்ட போட்டியாக இந்தப் போட்டி இடம்பெறும் என எதிர்பார்க்கப்பட்டது.  இதற்காக மைதானம் தயார்படுத்தப்பட்ட போதும், நடுவர்கள் மைதானத்தின் ஈரத்தன்மையை கருத்திற்கொண்டு போட்டியை கைவிடுவதாக அறிவித்தனர்.

ஓவர்கள் குறைக்கப்பட்ட போட்டியாக நடத்தும் முகமாக நடுவர்கள் மைதானத்தின் தன்மையை ஆராய்ந்திருந்தனர். இதன்போது, மைதானத்தின் சில பகுதிகளில் ஈரத்தன்மை அதிகமாக இருந்தது. அதனால் வீரர்களுக்கான பாதுகாப்பு மற்றும் சர்வதேச ஒருநாள் போட்டியின் ஆடுகளத்தின் தன்மை என்பவற்றை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. நடுவர்கள் மைதானத்தை ஆராய்ந்ததுடன், போட்டி மத்தியஸ்தர் எண்டி பைக்ரொப்ட்டுடன் கலந்துரையாடலை மேற்கொண்ட பின்னரே போட்டி கைவிடப்படுவதாக அறிவித்துள்ளனர்.

ஆட்டத்தின் போக்கை மாற்றியமைத்த நடுவர்களின் நான்கு தவறான முடிவுகள்

ஆட்டத்தின் போக்கை மாற்றியமைத்த நடுவர்களின் நான்கு தவறான முடிவுகள்

அவுஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டியில் நடுவர்கள் இழைத்த தவறுகள் குறித்து மேற்கிந்திய அணியின் சகலதுறை வீரர் கார்லோஸ் பிரத்வெய்ட் கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளார்.
நேற்றைய போட்டியில் நடுவர்களாக பணியாற்றிய கிறிஸ் கவானேயும் ருச்சிரபல்லியகுருவும் நான்கு தடவைகள் தவறிழைத்தனர்.
இந்த தவறுகள் மேற்கிந்திய அணியின்  தோல்விக்கு வழிவகுத்தன.
மேற்கிந்திய அணி துடுப்பெடுத்தாடிய வேளை நான்காவது ஓவரின் ஐந்தாவது பந்தில் மிச்செல் ஸ்டார்க் எல்பிடபில்யூ முறையில் கிறிஸ்கெயிலை ஆட்டமிழக்கச்செய்தார்.
பின்னர் தொலைக்காட்சி ரீபிளேக்கள் மூலம் அந்த பந்திற்கு முதல் பந்து நோபோல் என்பதும் நடுவர் கவானே அதனை கவனிக்க தவறிவிட்டார் என்பதும் தெரியவந்தது.
பிரீஹிட்டாக அறிவிக்கப்பட்டிருக்கவேண்டிய பந்தில் கெய்ல் நடுவரின் தவறினால் ஆட்டமிழந்தமை கடும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கிறிஸ்கெயில் ஆட்டமிழப்பதற்கு முன்னரும் நடுவர்கள் அவரிற்கு எதிராக  இரண்டு  தவறான தீர்ப்புகளை வழங்கியமையும் கெயில் அவற்றை மறுஆய்விற்கு  உட்படுத்தியதும் குறிப்பிடத்தக்கது.
முதலில் கெயில் விக்கெட் காப்பாளரிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார் என நடுவர் கவானே அறிவித்தார்.  அதனை கெயில் மறு ஆய்விற்கு உட்படுத்தினார்.
அதன் பின்னர் நடுவர் வழங்கிய எல்பிடபில்யூ தீர்ப்பும் பிழையானது என்பது மறு ஆய்வின் மூலம் தெரியவந்தது.
பின்னர் இலங்கை நடுவர் ருச்சிர பல்லியகுரு மேற்கிந்திய அணியின் தலைவர் ஜேசன்ஹோல்டர் எல்பிடபில்யூ முறையில் ஆட்டமிழந்தார் என இரு தடவைகள் அறிவித்தார்.
ஆனால் மறுஆய்வின் போது அவை தவறான முடிவுகள் என்பது தெரியவந்தது.
நடுவர்களின் இந்த தவறுகள் குறித்து கருத்து வெளியிட்டுள்ள கார்லோஸ் பிரத்வெய்ட் நடுவரின் முடிவுகள் அணியினர் மத்தியில் கடும் விரக்தியையும் குழப்பநிலையையும் ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
கடந்த சில வருடங்களாக மேற்கிந்திய அணியினருக்கு எதிராக பிழையான தீர்ப்புகளை நடுவர்கள் வழங்குவது அதிகரித்துள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஒவ்வொருமுறை எங்கள் கால்களில் பந்து படும்போதும் நடுவர்களின் விரல்கள் உயர்கின்றன எதிரணியின் கால்களில் பந்துபடும்போது விரல்கள் உயர்வதில்லை என கார்லோஸ் பிரத்வெய்ட் தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக நாங்கள் அடிக்கடி முடிவுகளை மறு ஆய்விற்கு உட்படுத்தவேண்டிய நிலைக்கு தள்ளப்படுகின்றோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதனை தெரிவிப்பதற்காக எனக்கு அபராதம் விதிப்பார்களா என்பது தெரியவில்லை ஆனால் நடுவர்களின் தீர்ப்புகள் கடும் ஏமாற்றத்தை அளித்துள்ளன எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாங்கள் பந்து வீசும்போது சில பந்துகளை அவர்கள் பிழையாக வைட் என அறிவித்தனர் என நாங்கள் கருதுகின்றோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
289 ஓட்டங்களை பெறவேண்டிய நிலையில் நாங்கள் துடுப்பெடுத்தாடும் போது தனிநபராக 180 ஓட்டங்களை பெறக்கூடிய கிறிஸ்கெயிலை இழப்பது என்பது நாங்கள் எதிர்பார்த்த ஆரம்பத்தை குழப்பியுள்ளது எனவும் கார்லோஸ் பிரத்வெய்ட் தெரிவித்துள்ளார்.

Monday, June 3, 2019

VIDEO : திசர பெரேராவை முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்க வேண்டுமென வலியுறுத்தி, மரத்தில் ஏறியபடி போராட்டம்.

VIDEO : திசர பெரேராவை முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்க வேண்டுமென வலியுறுத்தி, மரத்தில் ஏறியபடி போராட்டம்.


இலங்கை அணிக்காக மீகொடப் பகுதியை சேர்ந்த ஒருவர் வித்தியாசமான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார்.


தற்போது இடம்பெற்று வரும் உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் இலங்கை அணி சார்பில் திசர பெரேராவை முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்க வேண்டுமென வலியுறுத்தி மீகொட பகுதியைச் சேர்ந்த  நபர் ஒருவர் மரத்தில் ஏறியபடி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார்.

இந்நிலையில் குறித்த நபர் இன்று காலை 8.45 மணியளவில் மரத்தில் ஏறிய அவர் தனது போராட்டத்திற்கு முடிவு தெரியும் வரை தான் மரத்திலிருந்து இறங்கப்போவதில்லை எனத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில்,

“நான் மீகொட பகுதியிலிருந்து வருகிறேன் இன்று காலை 8.45, 9 மணியளலில் இந்த மரத்தில் ஏறினேன்

தற்போது இடம்பெற்று வரும் உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் எமது இலங்கை அணி சார்பில் திசர பேரேரா முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்க வேண்டும்

எமது அணி தொடர்ந்து தோல்வியுற்று வருவதை எம்மால் பார்த்துக் கொண்டு இருக்க முடியாது. இங்குள்ளவர்களுக்கு இலகுவான முறையில் எல்லா வேலைகளையும் செய்து கொள்கின்றார்கள்.

நாங்களும் இந்த நாட்டில் வரி செலுத்துகின்றோம் எனவே இவற்றை கேட்பதற்கு எமக்கு உரிமை உள்ளது.

எனவே விளையாட்டுத் துறை அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ மற்றும் இங்கிலாந்தின் இலங்கை அணி முகாமையாளருடன் கதைத்து தனக்கு முடிவு ஒன்றைக் கூற வேண்டும். அவர்களிடமிருந்து முடிவு வரும் வரை நான் போராட்டத்தை  கைவிட மாட்டேன் எனத் தெரிவித்தார்.


இதன் போது ஊடகவியலாளர் ஒருவர், அவர்களிடமிருந்து பதில் வராவிட்டால் என செய்வீர்கள் எனக் கேட்ட போது,

அதற்கு பின் எதுவும் செய்ய முடியாது. எமது இலங்கை அணிக்காக நான் எதையும் செய்வேன் என தெரிவித்துள்ளார்.


arrow_upward