நேற்று வெளிவந்த விஜய்யின் பிகில் பட ட்ரைலர் பற்றி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் அவர். "இந்த மாத இறுதியில் வரும் பிகில் படத்திற்காக அதிக ஆவலுடன் காத்திருக்கிறேன். விஜய் ரசிகர்களுக்கு மேலும் ஒரு ட்ரீட்டாக பிகில் இருக்கும் என நினைக்கிறேன்" என அவர் தெரிவித்துள்ளார்.
Showing posts with label CINEMA. Show all posts
Showing posts with label CINEMA. Show all posts
Saturday, October 12, 2019
Friday, July 26, 2019
திரைப்படமாகும் முரளிதரனின் வாழ்க்கை: கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி
இலங்கை அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதில் நடிகர் விஜய்சேதுபதி முத்தையா முரளிதரன் கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.
133 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய முரளிதரன் 800 விக்கெட்டுகளை வீழ்த்தி அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய பந்துவீச்சாளர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறார். இரண்டாவது இடத்தில் அவுஸ்திரேலிய அணியின் சுழற்பந்து வீச்சாளர் சேன் வோர்ன் உள்ளார்.
800 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்திருப்பதால் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறு படத்துக்கு ‘800’ என்று பெயரிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இலங்கை, இங்கிலாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் பெரும் பொருட் செலவில் படப்பிடிப்பு நடைபெற உள்ளதாகவும் கூறப்படுகிறது. விரைவில் படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Friday, May 31, 2019
Bigg Boss 3 ஆரம்பமாகும் திகதி அறிவிப்பு
Bigg Boss 3: நடிகர் கமல் கடந்த 2017 ஆம் ஆண்டு சின்னத்திரை தொகுப்பாளராக அறிமுகமானார்.
தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியை அவர் தொகுத்து வழங்கினார். முதன்முதலில் தமிழுக்கு அறிமுகமான அந்நிகழ்ச்சி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.
இதைத் தொடர்ந்து கடந்தாண்டு பிக்பாஸ் 2 நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கினார் கமல். இது முதல் சீசன் போல் அவ்வளவு சுவாரஸ்யமாக இல்லாமல் இருந்தது.
இதற்கிடையே மக்களவை மற்றும், சட்டமன்ற இடைத்தேர்தல்களில் படு பிஸியானார் கமல். அதோடு தனது கட்சியான மக்கள் நீதி மய்யத்தை மெருகேற்றுவதில் கவனம் செலுத்தினார்.
இதன் காரணமாக, பிக்பாஸ் 3 நிகழ்ச்சியை கமல் தொகுத்து வழங்க மாட்டார் என்ற கருத்துகள் நிலவி வந்தன.
ஆனால் சில தினங்களுக்கு முன்பு இதன் ப்ரோமோ வெளியாகி, அந்த வதந்திக்கு முற்றுபுள்ளி வைத்தது.
இந்நிலையில் இந்நிகழ்ச்சி வரும் ஜூன் 23 முதல் ஒளிபரப்பாவதாக தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் போட்டியாளர்கள் யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் நிலவி வருகிறது
Sunday, May 19, 2019
என் வாழ்க்கையை அழித்த நட்சத்திரங்களின் பெயர்களை வெளியிட போகிறேன் - ஷகீலா
கவர்ச்சி நடிகை ஷகீலாவை தெரியாதவர்கள் இருக்க முடியாது. அவரது வாழ்க்கை வரலாற்றை தற்போது திரைப்படமாக எடுத்து வருகின்றனர்.
"ஷகீலா - நொட் எ பார்ன் ஸ்டார்' என்ற பெயரில் உருவாகுகவர்ச்சி நடிகை ஷகீலாவை தெரியாதவர்கள் இருக்க முடியாது. அவரது வாழ்க்கை வரலாற்றை தற்போது திரைப்படமாக எடுத்து வருகின்றனர்.
"ஷகீலா - நொட் எ பார்ன் ஸ்டார்' என்ற பெயரில் உருவாகும் படத்தில் பொலிவூட் நடிகை ரிச்சா சத்தா ஷகீலா பாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் போஸ்டர்கள் வெளியானாலும் பெரிதாக எந்த பரபரப்பும் ஏற்படுத்தவில்லை.
இதனால் இந்த படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பு ஒன்றும் இல்லை என சினிமா துறையில் பேச்சு அடிபட்டது. அதனால் படத்தின் வியாபாரமும் பாதிக்கப்பட்டது. இந்நிலையில் ஷகீலா அளித்துள்ள ஒரு பேட்டியில், "என் வாழ்க்கையை அழித்த பல பெரிய நட்சத்திரங்களின் பெயர்களை இந்த படத்தின் மூலம் வெளியிடப்போகிறேன்" என கூறியுள்ளார்.
இதனால் ஷகீலா வாழ்க்கையில் நடந்த பல சம்பவங்கள் படத்தில் இருக்கும் என நாம் எதிர்பார்க்கலாம்.ம் படத்தில் பொலிவூட் நடிகை ரிச்சா சத்தா ஷகீலா பாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் போஸ்டர்கள் வெளியானாலும் பெரிதாக எந்த பரபரப்பும் ஏற்படுத்தவில்லை.
இதனால் இந்த படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பு ஒன்றும் இல்லை என சினிமா துறையில் பேச்சு அடிபட்டது. அதனால் படத்தின் வியாபாரமும் பாதிக்கப்பட்டது. இந்நிலையில் ஷகீலா அளித்துள்ள ஒரு பேட்டியில், "என் வாழ்க்கையை அழித்த பல பெரிய நட்சத்திரங்களின் பெயர்களை இந்த படத்தின் மூலம் வெளியிடப்போகிறேன்" என கூறியுள்ளார்.
இதனால் ஷகீலா வாழ்க்கையில் நடந்த பல சம்பவங்கள் படத்தில் இருக்கும் என நாம் எதிர்பார்க்கலாம்.
Tuesday, April 30, 2019
சுருட்டு பிடிக்கும் ராதிகா, சமூக வலைத்தளத்தில் சர்ச்சையை ஏற்படுத்திய போஸ்டர்
ராதிகா தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோயினாக வலம் வந்தவர். தற்போது சின்னத்திரையிலும் கொடிக்கட்டி பறக்கின்றார்.
அவர் தற்போது சரண் இயக்கத்தில் மார்க்கெட் ராஜா என்ற படத்தில் நடிக்கவுள்ளார், இப்படத்தில் பிக்பாஸ் ஆரவ் தான் ஹீரோவாக நடிக்கின்றார்.
அப்படியிருக்க இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது சமூக வலைத்தளத்தில் வெளிவந்தது.
இதில் ராதிகா சுருட்டு பிடிக்கும்படி இருக்க, அந்த போஸ்டர் சமூக வலைத்தளத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது, இதோ...
Saturday, January 5, 2019
விஸ்வாசத்துடன் வேண்டும் என்றே மோதுகிறதா பேட்ட! அதிர்ச்சி தகவல் - இதென்ன புது சர்ச்சை
Viswasam #Ajith Kumar #Ajith Fans #Petta #Rajinikanth #Rajini Fans
இவ்வருட பொங்கல் ஸ்பெஷல் விஸ்வாசம், பேட்ட என இந்த இரு படங்கள் தான். இரு தரப்பு ரசிகர்களும் மிகுந்த உற்சாகமாக இருக்கின்றார்கள். இரு படங்களுமே குடும்பத்துடன் ரசிகர்களை வரவைக்கும் என்பதில் சந்தேகமில்லை.
இந்நிலையில் அண்மையில் வந்த இரு படங்களின் டிரைலர்களும் ஒன்றை ஒன்று மோதிக்கொள்ளும் படியாக வசனங்கள் இருந்தன. அதே வேளையில் விஸ்வாசம் டிரைலர் பேட்ட படத்தின் சாதனைகளை முந்தியது.
மேலும் பேட்ட படத்தை விட விஸ்வாசம் படத்திற்கு பலர் முன்னுரிமை கொடுப்பது போல இருப்பதால் இப்படத்திற்கு அதிகப்படியான காட்சிகள், அதிகாலை காட்சிகள் இருக்கும் என தெரிகிறது.
இந்நிலையில் ரஜினி தன் குடும்பத்துடன் பேட்ட படத்தின் முதல் நாள் காட்சியை காண வருவதாகவும் அதனால் அனைத்து தியேட்டர்களும் பேட்ட படத்தை தான் முதல் காட்சியாக போட வேண்டும் என கூறியுள்ளதாக தகவல்கள் சுற்றி வருகின்றது.
ஆனால் இது எந்தளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை.

Friday, January 4, 2019
இளம் நடிகையின் காதல் வலையில் சிக்கிய ஆர்யா – விரைவில் திருமணமா…?
தமிழ் சினிமாவில் நிறைய நாயாகிகளுடன் காதலில் கிசுகிசுக்கப்பட்ட நடிகர் ஆர்யா, மீண்டும் பிரபல இளம் நடிகை ஒருவரின் காதலில் சிக்கி இருப்பதாக ஒரு தகவல் பரவி வருகிறது.
நடிகர் ஆர்யா, அறிமுகமானதிலிருந்து அதிக காதல் கிசுகிசுக்களில் தொடர்ந்து சிக்கி வருகிறார். முக்கியமாக நயன்தாரா, அனுஷ்கா, அமலாபால், பூஜா என இவருடைய பட்டியல் நீண்டு கொண்டே போகும்.
இந்நிலையில் திடீர் என, கடந்த வருடம் தான் திருமணம் செய்து கொள்ள போவதாக கூறி பிரபல தொலைக்காட்சியில் “எங்க வீட்டு மாப்பிள்ளை” என்கிற சுயம்வரம் சார்ந்த ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
இந்த நிகழ்ச்சியில் ஆர்யாவை திருமணம் செய்துகொள்ள, 12 பெண்கள் போட்டி போட்டனர். இறுதியில் இலங்கை மற்றும் கேரளாவை சேர்ந்த மூன்று பெண்களை தேர்வு செய்தார் ஆர்யா.
ரசிகர்கள் அனைவரும் யாரை ஆர்யா திருமணம் செய்து கொள்வார் என எதிர்ப்பார்த்து காத்துக்கொண்டிருந்த நிலையில், மூன்று பெரும் தனக்கு பொருத்தமானவர்கள், ஆனால் இதில் ஒருவரை தேர்வு செய்து மற்ற இரு பெண்களை கஷ்டப்படுத்த நினைக்கவில்லை என கூறி பெருத்த ஏமாற்றத்தை கொடுத்தார்.
இதனால் பொதுமக்கள் மத்தியிலும், ரசிகர்கள் மத்தியிலும் ஆர்யா அதிகமாக விமர்சிக்கப்பட்டார். பின் சில வாரங்கள் வெளியே தலைகாட்டாமல் வீட்டின் உள்ளேயே இருந்த இவர் தற்போது மீண்டும் படங்களில் நடிப்பது, பட விழாக்களில் கலந்து கொள்வது என பிஸியாக மாறி விட்டார்.
இந்நிலையில் ஆர்யாவுக்கும் இவருடன் ‘கஜினிகாந்த்’ படத்தில் இவருக்கு ஜோடியாக நடித்த நடிகை சயிஷாவும் காதலித்து வருவதாக ஒரு தகவல் பரவி வருகிறது. தற்போது சூர்யாவின் ‘காப்பான்’ படத்தில், சாயிஷா நாயகியாகவும் ஆர்யா முக்கிய வேடத்திலும் நடிக்கிறார்கள் இந்த படத்தின் போது இவர்களுடைய காதல் மேலும் அதிகரித்துள்ளதாகவும், கூறப்படுகிறது. எனினும் இந்த முறையாவது ஆர்யாவின் காதல் திருமணத்தில் முடியுமா இல்லை, இதுவும் வந்த வேகத்தில் வதந்தியாக கடந்து போகுமா? என பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.