மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட புணாணையில் கிழக்கு மாகாண ஆளுநரினால் அமைக்கப்பட்டு வருகின்ற மட்டக்களப்பு பல்கலைக் கழகம் எனும் பல்கலைக் கழகத்தினை பார்வையிடுவதற்காக பாராளுமன்ற உயர் கல்வி அமைச்சின் குழுவினர் இன்று வெள்ளிக்கிழமை விஜயமொன்றை மேற்கொண்டிருந்தனர்.
இப்பல்கலைக் கழகம் தொடர்பாக பாராளுமன்ற உயர் கல்வி அமைச்சின் குழுவினர் கடந்த ஏப்ரல் மாதம் 17ம் திகதி குறித்த பல்கலைக் கழகத்திற்கான வருகை தருவதற்கு இருந்தனர். ஆனால் நாட்டில் ஏற்பட்ட அசாதாரன சூழ் நிலை காரணமாக பிற்போடப்பட்டிருந்தது.
இக் குழுவினர் இன்று வெள்ளிக்கிழமை பாராளுமன்ற உறுப்பினரும், உயர் கல்வி அமைச்சின் கோப் குழு தலைவருமான பேராசிரியர் ஆசுமாரசிங்க, பாராளுமன்ற உறுப்பினர்களான ரோகினி விஜயரெட்ண, எஸ்.வியாளேந்திரன், உயர் கல்வி அமைச்சின் செயலாளர் சஜிவி கமகே, மகாவலி பிராந்திய முகாமையாளர் எஸ்.திசார ஆகியோர் வருகை தந்திருந்தனர்.
இதன் போது குறித்த பல்கலை கழகம் தொடர்பாக நாட்டில் ஏற்பட்டுள்ள சர்சை தொடர்பாக பல்கலைக் கழக நிர்வாகத்துடன் கலந்துரையாடல் இடம்பெற்றதுடன், பல்கலைக் கழகம் தொடர்பான ஆவணங்கள் பரிசோதனை செய்யப்பட்டதுடன், பல்கலைக் கழக வளாகம் மற்றும் சகல நிர்வாகப் பிரிவுகளையும் பார்வையிடப்பட்டனர்.

0 comments: