கிழக்கு மாகாண தொண்டராசிரியர்களுக்கு இலங்கை ஆசிரியர் சேவையின் 3ம் வகுப்பின் தரம் இரண்டிற்கு நிரந்தர நியமனம் வழங்குவதற்கான நேர்முகப்பரீட்சை இந்த மாதம் 20ம் திகதி ஆரம்பமாகவுள்ளது.
கல்வி ராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் விடுத்துள்ள செய்திக் குறிப்பு ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 20ம் திகதி முதல் 24ம் திகதி வரையான ஐந்து நாட்களுக்கு திருகோணமலையில் உள்ள கிழக்கு மாகாண சபை செயலகத்தின் கூட்ட மண்டபத்தில் இந்த நேர்முகப்பரீட்சைகள் நடைபெறவுள்ளன.
பல ஆண்டு காலமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இந்த நியமனங்கள், கல்வி அமைச்சருக்கு தாம் வழங்கிய அழுத்தத்தின் விளைவாக, விரைவாக நியமனங்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
811 தொண்டராசிரியர்களுக்குமான நேர்முகப்பரீட்சைகள் நிறைவடைந்தப் பின்னர், அவர்களுக்கான நியமனங்கள் விரைவில் வழங்கப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.

0 comments: